பிந்திய செய்திகள்

மலேசியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் விஞ்ஞானி போட்டிக்காக இலங்கையில்இருந்து நான்கு மாணவர்கள்..

 
• ஜப்பான் சகுரா விஞ்ஞான வேலைத்திட்டத்துக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் பத்து பேர்...
 
பங்குபற்றும் மாணவர்களுக்கு விமான பயண சீட்டுகளை  வழங்கி வைத்தார் கல்வி அமைச்சர்
 
ரஷ்யா ,ஜேர்மன்,சீனா,நெதர்லாந்து உள்ளிட்ட 35 நாட்டு பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ளும் 26 ஆவது சர்வதேச இளைஞர் விஞ்ஞானி போட்டி இம்முறை மலேசியாவின் கோலாம்பூர் நகரில் நடைபெறவுள்ளது.
 
2019 ஏப்ரல் 19-25 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ள குறித்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு மாணவர்கள் பங்குக்கொள்ளவுள்ளனர். இந்த போட்டிக்காக பாடசாலை,வலய,மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளின் போது விசேட திறமைகளை முன்வைத்த மாணவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் ஜப்பான் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக நடத்தப்படும் சகுரா விஞ்ஞான வேலைத்திட்டத்துக்கு விஞ்ஞான துறையில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு குறித்த வாய்ப்பை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களில் நேர்முக பரீட்சையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 10 பேர் ஜப்பானுக்கு பயணிக்கவுள்ளனர். இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது.
 
மேற்குறித்த போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கான விமான பயணசீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது குறித்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பயணசீட்டுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

Search