பிந்திய செய்திகள்

ஐந்தாம் தர புலமை பரிசில்  பரீட்சை இனிமேல்  கட்டாயம் இல்லை.

அதற்கான சுற்றுநிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது
 
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
 
 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை இனிமேல்  கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்குவதற்காகவும் 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்காகவும் வருடாந்தம் ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை நடத்தப்பட்டு வருகின்றது.
 
எனினும் அடிப்படை நோக்கங்களுக்கு மாற்றமாக சிறுவர்களை மனதளவில் பாதிக்கும் போட்டி பரீட்சையாகவும் மாணவர்கள் மீது  எல்லைமீறிய அழுத்தங்களை பிரயோகிக்கும் போட்டி தன்மை கூடியதாக மாறியுள்ளதாக உளவியல் நிபுணர்களும் கல்வியிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
 
எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலமை பரிசில் பெறவேண்டிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு பதிலாக பிரதான தேசிய பாடசாலை மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சை பெறும் அழுத்தங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எனவே .இந்த காரணங்களை அடிப்படையாக கொண்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திலுள்ள சிறுவர்களை தவிர ஏனையோருக்கு ஐந்தாம் தர புலமை பரீட்சை கட்டாயம் இல்லை என்பதுடன் குறித்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க கூடாது என 08.2019 சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இனிமேல் மாணவர்களின் விருப்பின் பிரகாரம் பெற்றோர்களின் ஒப்புதலுடன் குறித்த பரீட்சைக்கு தோற்றுவதா? இல்லையா? என மாணவர்களுக்கு முடிவெடுக்க முடியும்.
 
மேலும்  ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரம் உள்ள ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலமை பரிசில் பரீட்சைக்கு எழுதாவிடினும் குறித்த மாணவருக்கு வலயத்திலுள்ள பாடசாலையொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு வலய கல்வி பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு போட்டி தன்மை மேம்ப்படுத்துவதற்காக சுவரொட்டி, பதாகைகள் ஒட்டுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இவ்வாறான பிரசாரங்களில் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதனை கருத்திற்கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டள்ளது.
 
மேலும் பாடசாலைகளில் 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது சுற்று நிருப விதிமுறைகளின் பிரகாரம் வசதிகள் மற்றும் சேவை கட்டணம், பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்திற்கு பதிலாக வேறு ஏதும் வகையில் மாணவர்களிடம் இருந்து கட்டணங்கள் அறவிடுவது, நன்கொடைகள் பெற்றுக்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் நியமிக்கப்பட்ட ஐந்தாம் தர புலமை பரிட்சை தொடர்பான குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின் பிரகாரம் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Search