பிந்திய செய்திகள்

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றுநிருபம்

பாடசாலையினதும் பாடசாலை மாணவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில் விசேட சுற்;றுநிருபம் ஒன்றை வெளியிடுவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இதன்பிரகாரம் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலை சமூகத்தை அறிவுறுத்தல், பாதுகாப்பு குழுவை அமைத்தல், பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்த சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பாடசாலை சமூகத்தை அறியதருதலின் கீழ் பாடசாலையின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படும் நிலைமைகளின் போது இடர்நேர்வு நிலவரத்தை இனங்காணல் மற்றும் தவிர்த்தல், பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரித்து மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பழைய மாணவர்களுக்கு அறிய தர நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கு அப்பால் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்போடு பாதுகாப்பு குழுவொன்றை நிறுவுமாறு சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பல சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
இதன்படி மாணவர்களின் வருகை மற்றும் வெளியேறல் நுழைவாயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது புத்தக பை, பயண பொதிகளை பரிசோதனை செய்வதுடன் பாடசாலைக்கு வருகை தரும் மாணவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும், பாடசாலை வதிவிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்து தொடர்பாடல் முறைமையொன்றை கடைப்பிடித்தல் உட்பட 18 விடயங்கள் குறித்து சுற்றுநிருபத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த சுற்றுநிருபம் மாகாண பிரதம செயலாளர்கள்,மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அரச மற்றும் தனியார் பாடசாலை பிரதானிகள் மற்றும் பிரிவெனா பிரதானிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 

Search