பிந்திய செய்திகள்

பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்

இந்தியாவில் இருந்து குழுவொன்றும் வருகை 
 
பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்க விசேட வேலைத்திட்டமொன்றை கல்வி முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்காக இந்தியாவில் இருந்து குழுவொன்றும் வருகை தந்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
அலரிமாளிகையில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் மாத்திரம் நாம் கவனம் செலுத்தவில்லை. தீவிரவாத தாக்குதல் காரணமாக அதிகளவிலான சிறுவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மனதளவில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட பிரதேச மாணவர்களின் உளவியல் பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக விசேட குழுவினர் இந்தியாவில் இருந்து இலங்கை வருகை தந்துள்ளனர். இதன்போது மனோவியல் ஆலோசனைகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும். இந்த வேலைத்திட்டம் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மூலம முன்னெடுக்கப்படும் என்றார். 

Search