பிந்திய செய்திகள்

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் -பாதுகாப்பு பிரதானிகள் சான்றுப்படுத்தியுள்ளனர்.

அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னரே பாடசாலையை ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுத்தேன்.
- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
 
அனைத்து பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை  முப்படையும் பொலிஸூம் இணைந்து ஆரம்பித்துள்ளதாக 14 ஆவது படையணியின் பிரகேடியர் ரன்துல ஹத்னாகொட தெரிவித்தார்.
 
மே மாதம் முதலாம் திகதி முதல் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாக  பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்
மேலும் பாடசாலை நுழைவாயிலில் பரிசோதணை குழுவொன்றை பாதுகாப்புக்கு அமர்த்தவுள்ளோம் என்றார்.
 
இதன்போது  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறும் போது,
 
உளவு பிரிவினதும் பாதுகாப்பு சபையினதும் உறுதிப்படுத்தியதன் பின்னரே எதிர்வரும் 6 ஆம் திகதி பாடசாலை ஆரம்பிப்பதற்கு  ஜனாதிபதியும் அமைச்சரவையும் தீர்மானம் எடுத்தது.  தற்போது  அனைத்து பாடசாலைகளிலும் பரிசோதனை நடவடிக்கைகளை பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். எனவே பாதுகாப்பு பிரிவினருக்கு நான் நன்றி கூற  விரும்புகின்றேன் என்றார்.
 
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகளுக்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது ஆனந்த கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க மற்றும் பிரகேடியர் ரன்துல ஹத்னாகொட ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னரும் பின்னருமான பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

Search