- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
நாட்டின் கல்வி துறையில் நான்கு ஆண்டுகளில் பாரியளவில் சேவை செய்ய முடிந்ததாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டல் அதற்கு பக்கபலமாக இருந்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்
தேசிய பாடசாலைகளின் இடை நிலைய வகுப்புக்களுக்கு மாணவர் வெற்றிடங்கள் 45,000 இருப்பதை நாம் இனங்கண்டுள்ளோம். தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் 15,000 வெற்றிடங்கள் உள்ளன. இதன்படி குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதற்கட்டமாக நேர்முகப் பரீட்சைகளில் தெரிவான 4000 மாணவர்களை இடைநிலை வகுப்புகளுக்கு அடுத்த வாரம் இணைத்துக்கொள்ளவுள்ளோம்.
நகர பாடசாலைகளில் மாணவர்களுக்கு காணப்படும் இட நெருக்கடிகளை குறைத்து நகர பாடசாலைகளில் காணப்படும் அனைத்து வசதிகளையும் கிராமிய பாடசாலைகளுக்கும் வழங்குவதற்காக அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை ஆரம்பித்ததுடன் அந்த திட்டத்தின் கீழ் புதிய தேசிய பாடசாலையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தேன் என்றார்.