பாடசாலை கட்டமைப்பினை செயற்திறனாக முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின் தகவல்கள் புதுப்பிக்கப்பட்டதாக அமைய வேண்டியது அத்தியாவசியமாகும். இதன்படி தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் எதிர்காலத்தை அடையும் இந்த யுகத்தில் மிகவும் இலகுவாக தகவல்களை பெறும் வகையில் ஒன்லைன் முறைமை கீழ் நாட்டின் கல்வி கட்டமைப்பின் தகவல்களை முகாமைத்துவம் செய்வதனை பலப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரச, தனியார் மற்றும் பிரிவெனாக்களில் சேவை செய்யும் ஆசிரியர்களுக்கு செயற்திறன்மிக்க சேவையை வழங்குவதற்கும் திருப்திகரமான சேவையை வளர்ச்சிக்குட்படுத்தவும் விசேட பொறிமுறையை அமுலுக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் எதிர்பார்ப்பாகும்.