பிந்திய செய்திகள்

இந்தியா மற்றும் இலங்கையிடையே நிலவும் பௌத்த மத கோட்பாட்டினை பாதுகாப்பது மற்றும் இராஜதந்திர நடவடிக்கையை பலப்படுத்தும் நோக்கத்தினூடாக புதுதில்லி நகரில் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் தோரணையை கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் 15 ம் திகதி திறந்துவைத்தார்.

க.பொ.த. (சா.த.) சித்தியடைந்து உயர் தர வகுப்புக்காக மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் நேர்முகப் பரீட்சை பாடசாலைகளில் நடைபெறும்போது மாணவர்களின் புள்ளிகளோடு அவர்களின் பாடங்களின் ஊடாக விளையாட்டுடன் ஏனைய பிரிவுகளில் வெளிப்படுத்தப்படும் திறமைகளையும் கவனத்தில் எடுக்கப்படும். அதற்கமைய அதிகப் புள்ளிகளைப் பெறும் திறமையான மாணவர்கள் உயர் தரக் கல்விக்காக வேறு பாடசாலைகளில் சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதோடு உயர் தர கல்வியில் தாம் விரும்பும் பாடத்தினை தெரிவுசெய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதோடு அந்த பாடம் அந்த பாடசாலையில் இல்லையெனில் வேறு பாடசாலைகளில் சேர்வதற்கான வாய்ப்பு அம்மாணவர்களுக்கு கிடைக்கின்றது.

இலங்கை வரலாற்றில் இத்தகைய தொன்மையான பெறுமதிமிக்க இடங்கள் மற்றும் தொல்பொருள் அறிந்துகொள்ளல் மற்றும் பாதுகாப்பது குறித்து கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் விசேட பணிப்புரை மற்றும் வழிக்காட்டுதலின் ஊடாக மத்திய கலாச்சார நிதியத்தினூடாக பலவேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அணியினை உருவாக்குவதன் நோக்கமாக  கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அறிவூட்டுதல் மற்றும் வழிக்காட்டுதலுக்கமைய கல்வி அமைச்சில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. முன்மாதிரி தேசிய தொழில்நுட்ப கல்வியியற் கல்லூரிக்காக 15 ஏக்கர் காணி குளியாப்பிட்டிய நாரங்கவில் அமைந்துள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

2017 ஏப்ரல் மாதம் 16-ம் திகதி முதல் 22-ம் திகதி வரையில் ஜெர்மனியின் ஸ்டுட்காடில் நடைபெறவுள்ள 24 வது சர்வதேச இளைஞர் விஞ்ஞான போட்டியில் தமது விஞ்ஞான ஆராய்ச்சியை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைத்த சிறுவர்கள் இருவரும் விமான பயணச்சீட்டுகளை கல்வி அமைச்சர் அவர்களிடமிருந்து ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சில் பெற்றுக்கொண்டனர். Modification of Microbiology fuel cells via the immobilization of the anaerobe Clostridium butyricum and Escherichia coli-XII blue எனும் ஆராய்ச்சியை முன்வைத்த மன்னார் சித்தி வினாயகர் இந்து வித்தியாலயத்தின் மாணவர் ஜிதேந்திரன் ஜுட் சஜித் மற்றும் Deposition of air pollutants on pollen grains and occurrence of respiration allergies among humans எனும் ஆராய்ச்சியை முன்வைத்த கொழும்பு நாலந்த வித்தியாலயத்தின் மாணவர் ரகிந்து விக்கிரமரத்ன ஆகியோராவர்.

Search