பிந்திய செய்திகள்

 

கல்வி துறையின் மனித வள மற்றும் பௌதீக வள வளர்ச்சிக்காக தற்போதைய அரசாங்கம் பாரிய அர்ப்பணிப்பு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 2015/2017 கல்வியாண்டுக்கான போதனா கல்வி பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கம் கல்வி துறையை நவீனமயப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன்படி 4286 டிப்ளோமாதாரிகளில் சிங்கள மொழிமூலமான டிப்ளோமாதாரிகள் 2340 பேருக்கும் தமிழ் மொழி மூலமானவர்கள் 1300 பேருக்கும் ஆங்கில மொழிமூலமானவர்கள் 646 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலளாரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஆற்றிய உரை..... சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆற்றிய உரை....

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் 500 ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை (09) திங்கட்கிழமை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கஹதுடுவ வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட கல்வி மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி இந்த நிகழ்வுடன் நாடுபூராகவும் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் நாளை தினம் மாணவர்களிடம் கையளிக்கப்படும்
 
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா முதலீட்டில் 18,000 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் இதன்மூலம் 9064 பாடசாலைகள் பயனடைகின்றன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 200 பாடசாலை கட்டடங்களும் இரண்டாம் கட்டமாக 250 பாடசாலை கட்டடங்களும் ஒரே நாளில் பாடசாலை கட்டமைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை திங்கட்கிழமை 500 பாடசாலை கட்டடங்கள் ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
 

 
 
மலரும் குளியாபிட்டிய திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மயமானது. இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன் புதிய நூலக கட்டடத்திற்கும் அடிக்கல் நடப்பட்டது. மேலும்  வட மேல் பல்கலைகழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பீடம் பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டதுடன் குளியாபிட்டிய வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தியதோடு,  புதிய கட்டடத்திற்கும் அடிக்கல் நடப்பட்டது. மேலும் குளியாபிட்டிய நகரின் பிரதான சுரங்க பாதையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வீதி அபிவிருத்தி திட்டங்களும் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக 23,593 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.

வட மேல் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும்....

இம்மாதமளவில் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய பாடசாலை மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்கவுள்ளதுடன் இதன்மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு இரண்டாம் கட்டமாக மாகாண பாடசாலை உயர் தர மாணவர்களுக்கும் டெப் கணிணி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.   அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்ப வேண்டுமாயின்  பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்க வேண்டும்.  இதற்பிரகாரமே தொழில் கல்வியையும் தொழில்நுட்ப கல்வியையும் கல்வி திட்டத்தில் இணைத்துள்ளோம். இதன்படி தொழில்நுட்ப கல்வியை பயிற்சிவிப்பதற்கு காணப்படும் ஆசிரியர்களுக்கான பற்றாகுறையை நீக்கும் பொருட்டு இன்று இலங்கையின் முதற்தடவையாக தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக தொழில்நுட்ப கல்வியில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை உருவாக்க முடியும். எனினும் இந்த ஒரு கல்வியற் கல்லூரி மாத்திரம் போதாது. தற்போது இயங்கும் கல்வியற் கல்லூரிகளிலும் இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக் வேண்டும். வெளிநாடுகளை போன்று இலங்கையிலும் பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை நாம் உருவாக்க வேண்டும். எனவே பயிற்சியுடனும் புதிய அறிவுடனும் கூடிய தொழிலாளர்கள் உருவானால் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற்று நாட்டின் உற்பத்தி சார் வருமானமும் அதிகரிக்கும். ஆகவே பயிற்சியுடன் கூடிய தொழிலாளர் படையணியை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றார்.

 
 
 
நான்கு வருடங்கள் என்ற குறுகிய காலத்திற்கு பெருமளவிலான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த அரசாங்கம் இதுவரை தோன்றவில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று துறையிடம் இருந்து வந்த பிரச்சினைகள், ஊடகங்கள் ரீதியான பிரச்சினைகள் என பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிக்கொண்டு பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்தமை குறித்து குளியாபிட்டியில் நடந்த நிகழ்வொன்றின் போது நினைவூட்டினார்.

 
 
கல்வி அமைச்சின் கீழ் பணிபுரியும் பாடசாலை சிற்றூழியர், பாதுகாவலர் ஆகியோரின் பதவிக்கான நாமங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க விடுத்த கோரிக்கைகளின் பிரகாரம் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் பாடசாலை சிற்றூழியர்களின் நாமம் சேவை உதவியாளர் என்றும் பாதுகாவலரின் நாமம் சேவை உதவியாளர் ( பாதுகாப்பு) என்று திருத்தப்படும்.

 

தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு அத்திவாரமிட்டமையின் ஊடாக இலங்கையானது தொழில்நுட்ப துறையில் முன்னேறி செல்வதற்கான பொன்னான வாய்ப்பாக அமையும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

குளியாபிட்டி நகர அடிப்படையாக கொண்டு 23,593 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்  இன்று (01) ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது தொழில்நுட்பவியல் தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் புதிய நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நடல், வடமேல் பல்கலைகழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பீடத்தை திறந்து வைத்தல், குளியாபிட்டிய வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக தரமுயர்த்தல், புதிய சந்தை கட்டத்தை தொகுதிக்கு அடிக்கல்நடல் , நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சுரங்க பாதையை திறந்து வைத்தல் போன்ற பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம். ராஜித சேனாரத்ன உட்பட அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அத்துடன் கடந்த காலங்களில் மூவாயிரம் அளவிலான ஆசிரியர் பயிலுனர்களே கல்வியற் கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டனர். ஆனாலும் இம்முறை நான்காயிரத்துக்கும் அதிகமானோர் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இரு வருடங்கள் தாமதம் ஏற்பட்டது.  அதனை சீர் செய்வதற்காக ஒரு தவனையில் எட்டாயிரத்துக்கும் அதிகமானோரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோன்று அண்மையில் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட 16,000 பட்டதாரிகளில் 5000 பேரை உரிய பாடப்பரப்புகளுக்கு அமைவாக கல்வி கட்டமைப்பில் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 

ஆகவே இன்றைய தினம் குளியாபிட்டியில் தொழில்நுட்பவியல் கல்வியற் கல்லூரிக்கு மேலதிகமாக 23,593 மில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்த ஏற்பாடாகியுள்ளது. தற்போதைய அரசாங்கம் குருநாகலை அடிப்படையாக கொண்டு  அதிவேக பாதை உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

ஐந்தாம் தர புலமை பரிசிலுக்கான கொடுப்பனவை 50 வீதமாக அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரத்தை கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் முன்வைத்தமை குறிப்பிடதக்கது.

 

ஒரு மாணவருக்கு மாதாந்தம் 500 ரூபாவாக கிடைத்த கொடுப்பனவு தற்போது 750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 130,000 மாணவர்களை புலமை பரிசில் கொடுப்பனவை பெற்று வருகின்றனர்.

 

Search