பிந்திய செய்திகள்

மாற்றம் காணும் உலகிற்கு புதிய அறிவுடன் பயணிக்க வேண்டும். அதற்காக இலகுவாக பயணிக்க முடியுமான, வேகமாக புதிய அறிவூட்டல் வழங்குதற்கு திறமையான டிஜிட்டல் ஆசிரியர்களை அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கிரிஉல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட நாபொகுண கனிஷ்ட வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


கல்வி கட்டமைப்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 13 வருட கட்டாய கல்வி வேலைத்திட்டத்தின் கீழ் உயர் தரத்திற்கு தொழில் பாடத்துறை தேர்ந்தெடுத்து கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி பெறும் காலம் வரை நாளாந்தம் 500 ரூபா கொடுப்பனவை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் இலங்கையில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்தும் முகமாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2017 ஆம் தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைத்திட்டமாகும்.

எதிர்கால தொழில் உலகிற்கு ஏற்ற மனித வளத்தை பாடசாலையில் இருந்து உருவாக்கும் நோக்குடன் உயர்தர மாணவர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில் பாடத்துறையின் கீழ் 13 வருட சான்றுப்படுத்தப்பட்ட கல்வியை பயில்வதற்காக மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.க.பொத சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எவ்வாறு இருப்பினும் தொழல் பாடத்துறையின் கீழ் உயர்தரம் வரை செல்வதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பொருட்படுத்தாமல் நாளை உலகுக்கு ஏற்ற தொழில் துறைக்கான  26 பாடநெறிகளில் விரும்பிய 3 பாடத்தை தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, சிறுவர் உளவியல், உடற்கல்வி மற்றும் விளையாட்டு,கால்நடை உற்பத்தி தொழில்நுட்பம், உணவு உற்பத்தி திட்டமிடல் தொழில்நுட்பம், நிர்மாணத்துறை தொழில்நுட்ப கல்வி, மின் மற்றும் மின்னனு தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தினர் உபசரிப்பு, அழகு கலை உட்பட 26 பாடநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சிங்கள மொழியை போன்று தமிழ் மொழியிலும் தொழில் பாடத்துறை தேர்ந்தெடுத்து பயில்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது தமிழ் மொழி மூலம் 106 பாடசாலைகளில் தொழில் பாடத்துறைக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

13 வருட கட்டாய கல்வியின் கீழ் 310 பாடசாலைகளில் வெற்றிகரமாக தொழில் பாடத்துறை கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.தொழில் பாடத்துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2 வருட பயிற்சியின் பின்னர் என்.வி.கியு 4 சான்றிதழ் வழங்கப்படும்.அதன்பின்னர் மாணவர்கள் பல்கலைகழங்களில் உயர் மட்டம் வரை சென்று கல்வி பயில முடியும். மேலும் குறித்த பாடத்துறைக்காக வெளிநாடுகளுக்கு சென்று கல்வி முன்னெடுக்கவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுப்படவும் முடியும்.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் பாடத்துறையை பயிற்றுவிப்பதற்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளவும் பாடசாலைகளில் திறன் வகுப்பறையுடன் கூடிய அனைத்து வசதிகளையும் பாடசாலைகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர் - அதிபர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடிந்தது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஆசிரியர் மற்றும் அதிபர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு என்னால் முடிந்ததாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி துறையை செயற்திறனுடன் முன்னெடுக்கும் நோக்குடன் ஆசிரியர் மற்றும் அதிபர் வழங்கும் ஒத்துழைப்புகள் சாதாரணமானதல்ல. ஆகவே அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் - அதிபர்களின் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும்  பெருமளவில் அதிகரிக்க முடிந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நாபொகுன கனிஷ்ட வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை கல்வி அமைச்சர் மாணவர்களிடம் கையளித்த போது,...

 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதமாக அதிகரித்ததை போன்று , நிதி அமைச்சின் ஆதரவுடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் கிரிஉல்ல,ஹென்டியகல ரத்னபால மஹா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலையம் , விஞ்ஞான ஆய்வுக்கூடம் மற்றும் தொழில்நுட்ப கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (19) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் அதிகரித்த விதம் தொடர்பில் அண்மையில் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டோம். நாம் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை 106 சதவீதமாக அதிகரித்துள்ளோம். முதலாம் வகுப்பு ஆசிரியர்களின் ஆரம்ப சம்பளம் 21,750 ரூபாவாகவே காணப்பட்டது. எனினும் தற்போது சிரேஷ்டத்துவத்தின் பிரகாரம் கொடுப்பனவுகளுடன் 81,950 ரூபா வரை முழு சம்பளமாக பெறமுடியும்.  அதிபர்களின் சம்பளத்தையும் அதேபோன்று அதிகரித்துள்ளோம். 

அரச ஆசிரியர்களின் ஒய்வூதியம் 2800 ரூபாவில் இருந்து 20,000 ஆக அதிகரித்துள்ளோம். 1000,2000 ரூபாவுக்காக போராட்டம் நடத்தியோருக்கு தற்போது எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க முடியாது .மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மனசாட்சியை தொட்டுபார்த்தால் குறித்த வேலைநிறுத்தம் அநியாயம் என்றே உணர்ந்துக்கொள்வர் என்றார்.

அத்துடன் இந்த நிகழ்வினை அடுத்து கிரிஉல்ல நாபொகுன ஆரம்ப பாடசாலை, கிரிஉல்ல கோனுஉல்ல வித்தியாதீப்தி ஆரம்ப பாடசாலை மற்றும் கிரிஉல்ல ஜயசிறி ஆரம்ப பாடசாலைகளில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மாணவர்களிடம் இன்றைய தினம் (19) கையளித்தார்.

யார் என்ன கூறினாலும் அனைத்து இனங்களையும் பாதுகாக்கும் வகையிலும் எமது அரசாங்கம் செயற்படும் 

- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 


தமிழ் மக்கள் அதிகமாக செறிந்து வாழும் பகுதிகளில் பாடசாலை பற்றாகுறை இருப்பதனால் கொழும்பு மற்றும் வத்தளை நகரங்களில் புதிய தேசிய பாடசாலைகள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.  அத்துடன் யார் என்ன கூறினாலும் அனைத்து இனத்தவர்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து எமது அரசாங்கம் செயற்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வத்தளை ,ஹுனுப்பிட்டி அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை வளாகத்தை கல்வி அமைச்சுக்கு அன்பளிப்பு செய்தல் மற்றும் நான்கு மாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு தேசிய ஒருமைப்பாடு , அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

கொழும்பில் தமிழ் மொழியில் கல்வி நடவடிக்கை முன்னெடுக்கும் பாடசாலை தொடர்பாக பெரும் பெரும் சிக்கல்கள் காணப்படுவதாகவும் ஆகையால் புதிதாக தேசிய பாடசாலைகள் உருவாக்க வேண்டும் என கல்வி அமைச்சு பொறுப்பை தன்னிடம் வழங்கிய பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னிடம் தெரிவித்தார்

இதன்படி தற்போது கொழும்பு தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகளை புதிதாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று வத்தளையிலும் அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலை பதிலாக இன்னுமொரு தேசிய பாடசாலையொன்றை நிர்மாணிக்கவுள்ளோம். 

அத்துடன் வடக்கு கிழக்கு ,தெற்கு பேதங்களின்றி பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் யுத்ததினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி துறை அபிவிருத்திக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

யார் என்ன கூறினாலும் அனைத்து இனத்தவர்களுக்கும் மதிப்பளித்தும் பாதுகாத்தும் எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றார்.

இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது. உயர்தர பரீட்சைக்காக புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பதாரிகளின் முழுத் தொகை 337,704 ஆகும். மேலும் 2678 பரீட்சை நிலையங்கள் இம்முறை உயர்தர பரீட்சை நடத்தப்படவுள்ளது. 
அத்துடன் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 255,529 மாணவர்களும் .தமிழ் மொழி மூலமாக 83,840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதன்பிரகாரம் மொத்தமாக 339,369 மாணவர்கள் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்காக தோற்றவுள்ளனர். மேலும் 2995 பரீட்சை நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

இனங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் வருடாந்தம் நடத்தப்பட்டு வரும் ஆசிய பசுபிக் சிறுவர் மாநாடு இம்முறை ஜப்பான் யுனிஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. ஜுலை 14 ஆம் திகதி மாநாடு ஆரம்பமாகின்றது. இதற்காக இலங்கை சார்பாக 10 பேர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதற்கான பயணசீட்டினை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறித்த மாணவர்களுக்கு வழங்கினார்.

 

  • ஜுலை 29 முதல் நேர்முக பரீட்சை ஆரம்பம்


புதிய அதிபர் சேவை யாப்பின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் காணப்படும் மூன்றாம் வகுப்புக்கான அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக புதிய அதிபர்களை கல்வி கட்டமைப்பில் அவசரமாக இணைத்துக்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் இதன் பிரகாரம் அதற்கான நேர்முக பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வரை அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் வகுப்புக்கான அதிபர்கள் வெற்றிடங்கள் 1918 ஆக காணப்பட்டதுடன் அதற்கான நேர்முக பரீட்சை ஜுலை மாதம் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதிபர்களை இணைத்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்றோர்களில் வெற்றிடங்கள் உள்ள எண்ணிக்கைக்கும் அதிகமான தொகையினர் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது நேர்முக பரீட்சைக்கான கடிதம் தகுதியானோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் நேர்முக பரீட்சைக்கு அழைப்பு விடுக்கப்பட்டோரின் பெயர் பட்டடியலை கல்வி அமைச்சின் www.moe.gov.lk     இணையத்தளத்திற்கு சென்று பார்க்க முடியும். அத்துடன் நேர்முக பரீட்சை நடத்தும் திகதி மற்றும் நேரம் நாளை (19) முதல் அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்கள் வேகமாக மாணவர்கள் வசம்  ...

இலவச கல்விக்கான வாய்ப்புகளை மேலும் பூரணப்படுத்தும் வகையில் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய ,மாகாண மற்றும் தனியார் பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பிரதிலாபகங்கள் கிடைக்கும் வகையில் சுரக்சா காப்புறுதி திட்டம் அரசாங்கத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அரசாங்கத்தினால்  இலவசமாக வழங்கப்பட்ட சுரக்சா காப்புறுதி திட்டத்தின் பயன்களை அதிகளவில் மாணவர்கள் பெற்றுள்ளனர். இதன்படி சுரக்சா காப்புறுதி வேகமாக மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

சுரக்சா காப்புறுதி திட்டத்தின் ஊடாக மாணவர்களின் அவசர சிகிச்சை, பெற்றோர்களின் உயிரிழப்பு போன்ற பல்வேறு பிரிவகளின் கீழ் காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் போதும் காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். 
சுரக்சா காப்புறுதி திட்டம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் இந்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக தற்போதைக்கு 11,740 மாணவர்கள் 533 மில்லியன் ரூபா வரை காப்புறுதி பிரதிலாபகங்களை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்த பிரதிலாபங்கள் மாணவர்களுக்கு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது.

Search