பிந்திய செய்திகள்

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையின் கீழ் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 1980 ஆம் தொடக்கம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு அப்போதைக்கு அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்ததாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் 16800 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் புதிதாக அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 1347 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகள் 16800 பேரில் 5000 பேர் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இலங்கையின் அனைத்து பாடசாலை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையின் கீழ் அமுல்ப்படுத்தப்படும் சுரக்சா காப்புறுதி திட்டத்தின் ஊடாக தற்போதைக்கு (2018-12-01 முதல் 2019-07-29 வரை) 17,308 மாணவர்கள் செய்த விண்ணப்பத்திற்கு அமைவாக 777 மில்லியன் ரூபா காப்பீடு முழுமையாக செலுத்தப்பட்டு விட்டது. 

அரச, தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் சுரக்சா காப்புறுதியின் பயன்களை பெற்றுக்கொள்ள முடியும். ஐந்து வயது தொடக்கம் 21 வயது வரையான மாணவர்களுக்கு உரித்தாகும் .

இதன்பிரகாரம் சுரக்சா காப்புறுதியானது, மருத்துவ காப்புறுதி, விபத்து காப்புறுதி மற்றும் ஆயுட காப்புறுதி என மூன்று பிரிவுகளின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. 

மருத்துவ காப்புறுதி பிரிவின் கீழ் அரச வைத்தியாசாலையில் அனுமதிக்கப்படுவதாயின் ஒரு நாளைக்கு 3000 ரூபா  உள்ளடங்களாக ஆண்டுக்கு 200,000 ரூபா காப்பீட்டினை மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு 20,000 ரூபா காப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நோய், சிகிச்சை, மருத்துவ உபகரணங்கள் ஆகியவைகளை குறித்த காப்பீட்டின் கீழ் பெற முடியும். அத்துடன் அனைத்து தேவைகளை அடிப்படையாக கொண்டு தீவிர மற்றும் நீடித்த நோய் காப்பீடாக 200,000 ரூபாவுக்கும் அதிகமான தொகையை பெற்றுக்கொள்ள முடியும். (மருத்துவ பதிவுகளுக்கு உட்பட்டது).

விபத்து காப்புறுதி பிரிவின் கீழ் விபத்து அல்லது கடுமையான நோயினால் நிரந்தரமாக அங்கவீனமுற்றோருக்காக ஆண்டொன்றிற்கு 200,000 ரூபா காப்பீடுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் விபத்து அல்லது கடுமையான நோயினால் பகுதியளவு அங்கவீனமுற்றோருக்காக 150,000 ,200,000 ரூபா அளவிலான காப்பீடு தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் இயற்கையாகவோ அல்லது விபத்தின் காரணமாக மரணித்தால் 200,000 ரூபா காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோர் இருவர் குறித்த காப்புறுதிக்கு உள்ளடக்கப்படுவர். ஒரு குடும்பத்தில் பெற்றோர் மரணிக்கும் பட்சத்தில் சுரக்சா காப்புறுதி அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் கிடைக்கும். அத்துடன் மாணவர் ஒருவர் மரணித்தால் பெற்றோருக்கு குறித்த மாணவரின் இறுதி சடங்கிற்காக 150,000 ரூபா காப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். 

சுரக்சா காப்புறுதி பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பிக்கும் போது செய்ய வேண்டியது, 0112369369 அல்லது 0113641555 என்ற இலக்கத்திற்கே தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் அலியான்ஸ் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் கிளைகள் அல்லது வலய கல்வி திணைக்களத்தில் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். 2018 டிசம்பர் மாதம் 01 முதல் கடந்த காலத்திற்கான காப்பீடுகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க முடியும். 

இது தொடர்பான மேலதிக தொடர்புகளை றறற.அழந.பழஎ.டம என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் அல்லது பாடசாலை சுகாதார மற்றும் போசனை கிளை, கல்வி அமைச்சு, இசுறுபாய ,பத்தரமுல்லை என்ற முகவரியில் அல்லது முகாமையாளர், சுரக்சா காப்புறுதி, அலியான்ஸ் இன்சுரன்ஸ் லங்கா லிமிடட் நிறுவனம், இல- 46 கீழ் 10 , நவம் மாவத்த, கொழும்பு 02 என்ற முகவரிக்கு பெற்றுக்கொள்ள முடியும்.


இணைத்துக்கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சை, நேர்முக பரீட்சைகள் தற்போதைக்கு நிறைவு

மாணவர் ஆலோசனையை பாடசாலை மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுத்து செல்வதற்கான காலத்தின் தேவையை அறிந்து அதற்காக கல்வி கட்டமைப்பில் விசேட தகைமையுடன் கூடிய பட்டதாரிகளில் புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தேவையான ஒழுங்கு விதிகளை செய்யுமாறு  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய ஆலோசனையின் பிரகாரம் , கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் திகதியன்று அதற்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டது. 

இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் , ஆசிரியர் சேவையின் 3-1 (அ) வகுப்புக்காக மாணவர் ஆலோசனைக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைவாக குறித்த ஆசிரியர் இணைப்பு இடம்பெறவுள்ளது.

எனினும் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் ஆலோசனை  ஆசிரியர் நியமனத்திற்கு சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மாத்திரமே உடன்ப்பட்டுள்ளன. 

இதன்பிரகாரம்  தேசிய பாடசாலைகளில் 232  வெற்றிடங்களும் (சிங்கள மொழி-184 மற்றும் தமிழ் மொழி-48) வட மேல் மாகாண பாடசாலைகளில்341 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 274 மற்றும் தமிழ் மொழி-67) சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் 235 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 182 மற்றும் தமிழ் மொழி-53)உள்ளன. குறித்த வெற்றிடங்களுக்காக மாணவர் ஆலோசனை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் குறித்த நியமனத்திற்கான  நேர்முக பரீட்சை 2019-05-31 முதல் 2019-06-10 ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடத்தப்பட்டது. எழுத்து மூல பரீட்சை மற்றும் செயற்பாட்டு பரீட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகளில் எடுத்துக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் திறமைகள் உடையோர் குறித்த நியமனத்திற்காக இணைத்துக்கொள்ளப்படுவர்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி உதயமாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து....

"புதிதாய் உருவெடுக்கும் உலகத்துடன் மாணவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டியது அனைவரின் பொறுப்பாகும் "- க.பொ.த உயர் தரத்தில் தொழில்நுட்ப பாடதுறையை பயிற்றுவிக்கும் பாடசாலைகளுக்கு ரோபோ தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு.

-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் போசனையை சக்தியை அதிகரிக்கும் நோக்கில் காலை வேளையில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இரத்தினபுரி சாஸ்திரோதய வித்தியாலயத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். (காணொளி இணைப்பு)

பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 1347 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் குளியாபிட்டி நகர மண்டபத்தில் நடைபெற்ற போது...

தேசிய பாடசாலையில் மூன்று வருடங்கள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு தங்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்குவதற்கான நியமனம் நேற்று (29) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆரம்ப பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் போசனையை சக்தியை அதிகரிக்கும் நோக்கில் காலை வேளையில் பசும்பால் வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இரத்தினபுரி சாஸ்திரோதய வித்தியாலயத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கலந்து கொண்ட போது.....

கல்வி அமைச்சரினால் அனைத்து கலாநிதி, பேராசிரியர்களுக்கும் அழைப்பு
  • சட்டத்துறை பாடம்  பாடசாலை பாடத்திட்டத்தினுள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை முன்னெடுப்பு
நாட்டின் கல்வி கட்டமைப்பின் அபிவிருத்திக்காக புத்திஜீவிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகள் அனைத்தும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நாட்டின் எதிர்கால தலைமுறையை கல்வியின் ஊடாக முன்னேற்றுவதற்காக புதிதாகவும் மாற்றத்துடனும் சிந்திப்போர் பலர் உள்ளனர். எனவே மாற்றங்களுடனான புதிய ஆலோசனைகளை எனக்கு உடன் அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தேசிய நூலக மற்றும் ஆவண சேவை சபையின் புத்சரண நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று(30) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பழைய நூல்களை நாம் ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும். அதேபோன்று சிங்கள மொழியிலான பழைய நூல்களை தமிழிலும் தமிழ் மொழி நூல்களை சிங்களத்திலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். 
அத்துடன் பாடசாலை பாடத்திட்டத்திற்கு சட்டத்துறை பாடத்தை உட்சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சிறுவர்களின் எதிர்காலத்திற்காக செலவினை கருத்திற்கொள்ளாது செய்ய முடியுமான அனைத்து மாற்றங்களை கல்வி கட்டமைப்பில் நான் முன்னெடுக்க அர்ப்பனிப்புடன் செயற்படுவேன். மேலும் பாடசாலை மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க செய்வதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை நூலகங்களுக்கு தேவையான நூல்களை விலைக்கு வாங்குவதற்காக 700 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளேன்.  இதன்படி அதிகளவில் நூல் வாசிக்கும் மாணவர்கள் 1000 பேர் இவ்வாண்டும் கௌரவிக்கப்படுவர் என்றார்.

தென் ஆபிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச கணித போட்டியில் பங்குபற்றவுள்ள மாணவர்களுக்கும் அதிகாரிகளுக்கு விமான பயணச்சீட்டு அன்பளிப்பு செய்த போது....

அரசினால் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அநாதை இல்லங்களிலுள்ள பெற்றோர்களை இழந்த சிறுவர்கள் அனைவரும் அநாதை இல்லங்களுக்கு அருகிலுள்ள தேசிய பாடசாலைகளில் உள்நுழைவதற்கு வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அண்மையில் பிரபல பாடசாலையொன்றுக்கு அநாதை இல்லத்தில் உள்ள சிறுவர்கள் பலர் விண்ணப்பித்த போது அப்பாடசாலை அதிபர் குறித்த விண்ணப்பங்களை நிராகரித்த தகவல் அமைச்சருக்கு கிடைத்தமை அடுத்து  அமைச்சர் இந்த ஆலோசனையை விடுத்துள்ளார்.
சிறுவர்களுக்கு கல்வியை பயில்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெற்றோர்கள் இழந்த பிள்ளைகளை பிரித்து நோக்கும் செயலை வண்மையாக கண்டிப்பதுடன் கல்வியின் ஊடாக வாழ்க்கையை வெற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை அனைத்து சிறுவர்களுக்கும் வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Search