பிந்திய செய்திகள்

அருகாமை பாடசாலை – சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலை தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
70 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களே இங்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண கலந்து கொண்டிருந்தார்.

அரச ஊழியர்கள் 15 இலட்சம் பேர்களின் அடிப்படை சம்பளத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது தெரிவித்தார்.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் ஓய்வுப்பெற்ற அரச ஊழியர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றும் போது,
2015 ஆம் ஆண்டு 11,730 ரூபாவாக இருந்த சாதாரண அலுவலக உதவியாளர் ஒருவரின் அடிப்படை சம்பளத்தை தற்போது 24,250 ரூபாவாக அதிகரித்துள்ளோம். மேலும் சாரதியொருவரின் அடிப்படை சம்பளம் 2015 ஆம் ஆண்டு 12,430 ரூபாவாக இருந்ததுடன் தற்போது 25,790 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முகாமைத்துவ உதவியாளர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 2015 இல் 13,990 ஆக இருந்ததுடன் அந்த தொகை தற்போது 28,940 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 16,120 ரூபாவாக இருந்த பட்டதாரி ஆசிரியர் ஒருவரின்; அடிப்படை சம்பளத்தை 33,330 ரூபாவாக அதிகரித்துள்ளளோம். இது போன்று அனைத்து அரச ஊழியர்களின் சம்பளம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் குறைத்துள்ளோம். எரிபொருட்களின் விலைகள் மற்றும் சமையல் எரிவாயுவொன்றின் விலையும் 2014 ஆம் ஆண்டு இருந்ததை விட குறைவாகவே இன்னும் உள்ளது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
 
கல்வி கட்டமைப்பை அரசியலில் இருந்து மீட்க வேண்டும். கல்வி துறையின் அனைத்து பதவிகளும் தகைமை உடையோருக்கு வழங்குவதே எனது கொள்கையாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
 
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 35 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிரிஉல்ல ரத்னாலங்கார மஹா வித்தியாலயத்தின் ஆய்வு கூடம் மற்றும் ஆரம்ப கல்வி கற்றல் வள நிலையம் ஆகியவற்றை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
 
அதிபர்களுக்கான பயிற்சி மற்றும் தரமான அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதிபர்கள் 1000 பேருக்கு வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளோம்.
கடந்த நான்கு வருடங்களில்; தகைமையற்ற ஆசிரியர்கள் எவரையும் கல்வி கட்டமைப்பில் இணைக்கவில்லை. கல்வியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வீதத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்காக விடுதிகளுக்கான வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
 
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் தி;ட்டத்தின் கீழ் 5000 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். தேசிய பாடசாலைகளுக்கு 3500 ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பத்திரத்தை அமைச்சரவைக்கு முன்வைத்துளளேன்.
மேலும் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் கணிணி இவ்வருடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் தர மாணவர்களுக்கும் டெப் கணிணியை பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நிலைமை ஏற்படும் என்றார்.
 

 கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
 
 
ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் தென்னை ஓலைகளினால் ஆன குறைந்த வசதிகளை கொண்ட இடங்களில் கல்வி பயிலும் கவலையான செய்தி தனக்கு கிடைக்கபெற்றது. இவ்வாறான நிலைமைக்கு மாகாண சபை அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வசதிகளை கொண்ட பாடசாலைகளை வசதிகள் கொண்டதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டத்;துக்கு பாடசாலைகளை தேர்தெடுக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வளவு விதிகளின் அடிப்படையில் பாடசாலைகள் தேர்தெடுக்கப்பட்டன.
எனினும் ஒரு சில பிரதேச அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தேர்வளவு விதிமுறை ; மீறப்பட்டமையினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது கவலைக்குரிய நிலைமையாகும்.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் அறிக்கை கோரியுள்ளேன். இந்த நிலைமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
(இதற்கான காணொளி, புகைப்படம் மின்னஞ்சல் செய்யப்பட்டுள்ளன)
 

 
 
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் போயவலான மஹா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப கட்டடம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் ஞாயிற்றுக்கிழமை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது

ஒரு சில மாகாண சபைகளின் செயற்பாடுகளினாலேயே உளவியல் ஆலோசனைக்கு முறையான பயிற்சியுடன் கூடிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இன்று (14) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில்; கல்வி அமைச்சின் மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் போது

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிப்பு

கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் ஊடாக விஞ்ஞான ஆய்வு கூடம், தொழில்நுட்ப கூடம், இரண்டு மற்றும் மூன்று வகுப்பறை கட்டடங்கள், மலசல கூடங்கள் என பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் கிராமிய பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய முயற்சியாகும்.

வடக்கு,கிழக்கு மற்றும் மலையக ஆகிய பகுதிகளில் வசதி குறைந்த பாடசாலைகளை தேர்ந்தெடுத்து அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். இதுவரை கல்வி துறையில் செய்யாத மாற்றங்களை செய்து வருகின்றோம்.

அத்துடன் நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாடளாவிய அனைத்து பாடசாலைகளிலும் 35ஆயிரத்துக்கும் அதிகமான மலசல கூடங்களை நிர்மாணித்துள்ளோம். மேலும் குடிநீர் வசதிகளையும் பெரும்பாலான பாடசாலைகளுக்கு வழங்கியுள்ளோம். நாம் ஆட்சிக்கு வந்த போது 60 சதவீதமே நாடளாவிய அனைத்து பாடசாலைகளிலும் மின்சார வசதி இருந்தது. எனினும் தற்போது 98 வீதமான பாடசாலைகளுக்கு மின்சார வசதி உள்ளது.

மேலும் ஒரு சில பாடசாலைகளில் மேசை, கதிரை பற்றாகுறை இருப்பதாக விவாதத்தின் போது பலரும் குற்றம் சுமத்தினர். எனினும் மேசை,கதிரை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் இந்த பிரச்சினையை எம்மால் மாத்திரம் தீர்க்க முடியாது. மாகாண சபைகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரச்சினை உள்ளது. இது இன்று நேற்று வந்த பிரச்சினை இல்லை. முரண்பாடு தொடர்பில் தொழிற்சங்கத்துடன் பேசினேன். இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். இது தொடர்பாக அரச துறை ஊழியர்களின் சம்பள கலந்தாய்வு ஆணைக்குழுவுக்கு யோசனைகள் முன்வைத்துள்ளோம். இந்த விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவே தீர்மானம் எடுக்க வேண்டும். கல்வி அமைச்சினால் எதுவும் செய்ய முடியாது. எனினும் நாம் ஆட்சிக்கு வந்த கையோடு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளோம். அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவை 6000 ரூபாவாக அதிகரித்துள்ளோம். எனினும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அதனை மறந்துள்ளனர். சம்பள முரண்பாடு பிரச்சினையை தீர்க்க நாம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதற்காக போராட்டம் நடத்தி அமைச்சின் வாயிலை உடைத்து கொண்டு வரப்பார்த்தனர். நாம் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் இல்லை. நான் பல முயற்சியுடன் கல்வி துறையின் வளர்ச்சிக்கு பாடுப்படுகின்றேன்;.

வடக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தொண்டர் ஆசிரியர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இணைத்துக்கொண்டோம். நாம் பதவிகளுக்கான வெற்றிடங்கள் நிரப்பும் போது எந்தவொரு அரசியல் தலையீடுகளும் செய்யவில்லை. அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி கல்வி கட்டமைப்பில் உள்ள வெற்றிடங்களை நிரப்பி வருகின்றோம். நாம் ஆட்சிக்கு வரும் போது 20 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் இருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வாக வெற்றிரடங்களை நிரப்பி வருவதுடன், அதற்கு மாற்றமாக முறையான ஆசிரியர் இடமாற்றங்களை செய்து வருகின்றோம். என்றாலும் ஆசிரியர்களின் வெற்றிரடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு கிடைப்பது குறைவாகும். பல்வேறு ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு கிடைக்காதமையினால் நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.

நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் பயிற்சி இல்லாத ஆசிரியர்களை இணைத்து கொள்ளவில்லை. பயிற்சி வழங்கியே ஆசிரியர்களை இணைத்துக் கொண்டு வருகின்றோம். வடக்கில் மாத்திரமே பிரச்சினை இருந்தது. வடக்கில் அதனால் பயிற்சியற்ற ஆசிரியர்களை இணைத்தோம். மேலும் இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பூரண பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
அத்துடன் தனியார் பாடசாலைகளில் கல்வி தரத்தை கண்காணிப்பதற்கு மேற்பார்வை ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். இதன் ஊடாக கற்றல் மற்றும் பயிற்றுவித்தல் முறைமையை கண்காணிக்கவுள்ளோம். மேலும் தற்போது காலத்திற்கு ஏற்றவகையில் தொழில் பிரவேசித்திற்காக 13 வருட தொடர் கல்வி முறைமையை கொண்டு வந்துள்ளோம். இதன்ஊடாக நவீன தொழில் யுகத்துக்கு ஏற்ற பாடத்துறைகளை மாணவர்களுக்கு தெரிவு செய்துக்கொள்ள முடியும். இது கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்ட பாரிய புரட்சியாகும். மேலும் 43 இலட்சம் மாணவர்களின் ஆரோக்கிய நலனை கருத்திற்கொண்டு சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். எனவே நாட்டின் கல்வி துறை வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.

 

சம்பள முரண்பாடுகளை நீக்குமாறும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை நீக்குமாறு கோரி வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தும் தொழிற்சங்கங்களின் சந்தர்ப்பவாத நோக்கங்களை நாட்டு மக்கள் மற்றும் கல்வி கட்டமைப்பில் சேவை புரிவோர் புரிந்துக்கொள்ள வேண்டும். 
 
ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு இருப்பதாக 1997 ஆம் ஆண்டு பீ.சீ பெரேரா கண்டறிந்ததுடன் இது தொடர்பாக சம்பள ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை 22 வருடங்களாகியும் அமுல்ப்படுத்தவில்லை என்ற் தர்க்கத்தை முன்னிலைப்படுத்தியே தொழிற்சங்கங்கள் இன்றைய  வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பினை பெற்றுள்ளனர்.
 
எனினும் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் அரச நிர்வாக சுற்றுநிருப ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக அனைத்து அரச ஊழியர்களின் சம்பள அளவுத்திட்டத்தை திருத்தி அமைத்தது.; இதன்பிரகாரம் பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 16,120 ரூபாவில் இருந்து 33,330 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு அப்பால் அதிர்பர்களின் சம்பளமும் இதற்கு சமாந்தரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிபர்களின் 750 ரூபா கொடுப்பனவை 6000 ரூபாவாக அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் பேரில்; கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
நீண்டகாலமாக நிலைக்கொண்டுள்ள சம்பள முரண்பாட்டு பிரச்சினைகளை ஒன்றின் ஒன்றாக இனங்கண்டு அதற்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வரும் போது ,தொழிற்சங்கங்கள் இதனை தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியென காண்பித்து தமது சங்கங்களில் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் முயற்சியாகவே இனங்காண முடிகின்றது.
 
அத்துடன் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் கல்வி அமைச்சினால் விசேட யோசனைகளை அரச துறை சம்பள கலந்தாய்வு ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளதுடன் அதற்கான பரிந்துரைகளை ஆணைக்குழு அரசாங்கத்துக்கு வழங்கிய கையோடு சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கு உரிய தீர்வினை கல்வி அமைச்சு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்.
 
இந்நிலையில் தமது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே குறித்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க தலைவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்படும் தொழிற்சங்கமொன்றின் தலைவருக்கு ஆசிரிய இடமாற்றல் விவகாரத்தில் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
மேலும் கல்வி கூட்டுறவு கடன் வழங்கல் சங்கமொன்றில் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தொழிற்சங்கமொன்றின் தலைவரும் அவரது குழுவினரும் சங்கத்தின் அடுத்த தேர்தலில் ஆசிரியர்களின் ஆதரவை பெறும் நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலவச கல்வி உரிமை தொடர்பில் மார்த்தட்டிக்கொள்ளும் குறித்த தொழிற்சங்க குழுவினர் இன்றைய தினம் பாடசாலை வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அச்சுறுத்திய பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதுமாத்திரமின்றி மாணவர்களை பாடசாலைக்கு இன்று வரவேண்டாம் என ஆலோசனை வழங்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த செயற்பாடுகள் தொழில் உரிமைகள் பெயரில் பாடசாலைகளில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.
 
இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைகளினால் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன் ஒரு மாணவன்; நாளொன்றுக்கான ஆறு மணிநேரம் கல்வி பயில்வதாக எடுத்துக்கொண்டால் இன்றைய தொழிற்சங்க நடவடிக்கைளினால் நாடுபூராகவும் உள்ள 43 இலட்சம் மாணவர்களுக்கான ; இரண்டு கோடியே 58 இலட்சம் (25,800,000) மணநேர கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி எடுத்துள்ளமையே இன்றைய போராட்டத்தின் ஊடாக நடந்துள்ளது. இது கவலைக்குரியதாகும்.
 
எனவே மாணவர்களையும் ஆசிரியர்களையும் பகடையாக பயன்படுத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் இன்றைய வேலைநிறுத்தம் தொடர்பில் மக்களும் கல்வி கட்டமைப்பில் சேவையில் ஈடுப்படுவோரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
 
ஊடகப்பிரிவு
கல்வி அமைச்சு   
 
 

Search