சீக்கிரமாக மாறி வரும் உலகத்துடன் இணைந்து எமது எதிர்கால சந்ததியினரை தயார்படுத்துவதற்கு சில தீர்மானங்களை மேற்கொள்ளும்போது விமர்சிப்பதும் தடை போடுவதுமாக அன்றி சாதகமாக செயல்படுவோர் இருப்பார்களேயானால் அபிவிருத்திக்கான பயணம் வேகமானதாக அமையும் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
மிலாகிரிய புனித பவுல் மகளிர் வித்தியாலயத்தின் நான்கு மாடி விளையாட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா 10 ம் திகதி நடைப்பெற்றபோது அதில் பங்கேற்று மேற்கண்ட கருத்தை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பாதிப்புக்குள்ளான அனைத்து பாடசாலை கட்டிடங்களையும் துரிதமாக மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை.
அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான பாடசாலை மாணவர்கள் மீண்டும் தமது கல்வியை தொடர்வதற்கான நிலைமையை உறுதிசெய்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் விசேட பொதியினை விநியோகிக்கும் நிகழ்வு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கென கல்வி அமைச்சின் ஊடாக வழங்கிய பொதியில் ரூபாய் 10000 பெறுமதியான பொருட்கள் உள்ளடங்குகின்றன. இதில் சீருடைத்துணி 3 தொகுதி, சப்பாத்து வவுச்சர், பாடப்புத்தகங்கள், அப்பியாசக்கொப்பிகள் மற்றும் கடந்த வருட வினாத்தாள்கள் போன்றவை அடங்குகின்றன.
பாதிப்புக்குள்ளான அனைத்து பாடசாலை கட்டிடங்கள் மற்றும் உபகரணங்களை மீண்டும் திருத்தியமைக்க அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கு முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தமது வேண்டுக்கோளுக்கிணங்க அனைத்து பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்கள் மற்றும் கௌரவ அமைச்சர்கள் தமது ஒரு மாத சம்பள பணத்தினை வழங்கியதில் கிடைத்த ரூபாய் ஐந்து மில்லியனுக்கும் பெறப்பட்ட அப்பியாசக்கொப்பிகள் இப்பொதியில் உள்ளடங்குவதாக கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
சம்புத்த சாஸனம் மற்றும் இந்நாட்டில் பௌத்த பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் ருவன் வெலிசாய போதிக்கு முன்னிலையில் சத்தியம் செய்தார். ருவன் வெலிசாய விகாராதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்ன தேரரின் உபதேசத்தின்படி கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அறிவுரையின்படி மத்திய கலாச்சார நிதியத்தின் ஊடாக 23 மில்லியன் ரூபாய் செலவில் ருவன் வெலிசாய போதி பாதுகாப்பு பணி செய்துமுடிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் பௌத்தப் புராதன காணி பிரதேசங்களின் எல்லைகளை உறுதிபடுத்தும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி கூரகல ஆதி புராதன இடம் விரைவில் பாதுகாக்கப்படுவதற்கு தாம் தலையிடப்போவதாக கூறிய அமைச்சர் இதனால் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்றார். சுற்றுலா பயணிகளிடம் அறவிடப்படும் நுழைவுக் கட்டணத்தினூடாக மத்திய கலாச்சார நிதியத்திற்கு கிடைத்த வருமானத்தில் நாடு முழுவதிலும் இதுபோன்று விகாரை பாதுகாப்புக்கென இவ்வாண்டு 400 மில்லியன் ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 100 மில்லியன் ரூபாய் தொலைதூர விகாரை பாதுகாப்புக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.
கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பூஜையில் அமைச்சர்களான கௌரவ பி. ஹரிசன் அவர்கள், கௌரவ சந்திராணி பண்டார அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சந்தர்ப்ப அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய சிலரால் மேற்கொள்ளப்படும் நீதிக்குப் புறம்பான செயல்களை கண்டு அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயல்படுகின்றது.
- கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள்
சந்தர்ப்ப அரசியலில் இலக்கை அடைவதற்காக சிலரால் நீதிக்குப் புறம்பான செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மக்களின் உயிருக்கு கேடு விளைவிக்கும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் செய்வதும் சிலரால் ஒழுங்கமைக்கப்படுகின்றது. இன விரோதத்தை கட்டியெழுப்புவதும், சுகாதார அமைச்சில் இடம்பெற்ற செயல்களையும் கண்டு அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயல்படுகின்றது. கடந்த அரசாங்கத்தைப் போன்று ஆட்சியை விமர்சிக்கும் ஊடகங்களை நாம் தாக்குவதில்லை என கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தெரனியகல சிரிசமன் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாக கட்டிடம் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை குகை விகாரையின் ஓவியங்கள் அழிந்து போகும் அச்சுறுத்தலுக்குள்ளாகியது சம்பந்தமாக அந்த விகாரையின் தேரர்கள் தெரிவித்ததிற்கமைய, தலையிட்டு அதனை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அந்த விகாரையின் தற்போதைய நிலைமையினால் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான ஆபத்து நேர்ந்துள்ளதென யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டமையினால் தாம் தலையீடு செய்ததாகவும், இதனை சிலர் தன்னை பைரன் என குற்றஞ்சாட்டுவதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
எவர் குற்றஞ்சாட்டினாலும், நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு பைரவன் போன்று நடவடிக்கை மேற்கொள்ள தாம் தயார் என தேசிய கல்வி நிறுவன வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து மாடி கட்டிட திறப்புவிழாவில் 03 ம் திகதி கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் பங்கேற்று இதனை தெரிவித்தார்.
நாட்டின் கல்வியை கட்டியெழுப்பும் கடமையை நிறைவேற்றுவதே தமது பிரதான நோக்கம் என்றும், அதற்காக ஒவ்வொரு நிறுவனத் தலைவர்களும் தாம் நிறைவேற்ற வேண்டிய வேலைகளை ஒழுங்கான முறையில் செய்து முடிக்கவேண்டியது அவசியமாகும் எனக் கூறினார். சிநேகபூர்வம், அரசியல் கருத்தினை கொண்டு தாம் முடிவெடுப்பதில்லை எனவும், தாம் வகிக்கும் பதவிக்கான பொறுப்பினை ஒழுங்கான முறையில் நிறைவேற்றத் தவறும் அதிகாரிகளை விலக்குவதற்கு தாம் ஒருபோதும் தயங்கப்போவதில்லை எனவும் அமைச்சர் அவர்கள் மேலும் கருத்து தெரிவித்தார்.
பொய் மற்றும் மோசடிகளால் மக்களை தவறாக வழிநடத்திச்செல்லும் சில அரசியல்வாதிகளினால்தான் நாட்டை சீக்கிரமாக முன்னேற்ற எம்மால் இன்னும் முடியவில்லை எனவும், எத்தகைய தடைகள் மற்றும் சவால்கள் வந்தாலும் நாட்டிற்கு ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதே தமது நோக்கம் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் அவர்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதான அத்தியட்சகர் திருமதி ஜெயந்தி குணசேகர அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.
டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மற்றும் டிஜிடல் ஆவண காப்பக பதிவேட்டுக் கூடம் அமைப்பது குறித்து விசேட சர்வதேச பயிற்சிப்பட்டறை மற்றும் சர்வதேச ஆவண பாதுகாப்பு சபையின் தென்மேற்கு ஆசிய வளைய கிளையின் நிறைவேற்றுக் குழுக்கூட்டம் கடந்த 21 ம் திகதி தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மற்றும் டிஜிடல் ஆவண காப்பக பதிவேட்டுக் கூடம் அமைப்பது பற்றி புதிய விடயங்களை பரிமாறிக்கொள்ளல், ஒவ்வொரு நாடுகளின் வரலாறு மற்றும் கலாச்சார ஆவணங்களின் பிரதிகளை பரிமாறிக்கொள்ளல், பதிவேட்டுக்காப்பாளர்களுக்கிடையே எதிர்கால நல்லெண்ணங்களை விருத்தி செய்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இந்த பயிற்சிப்பட்டறை நடைப்பெற்றது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ கல்வி அமைச்சர் எந்தவொரு நாட்டிலும் எழுதப்பட்ட பாரம்பரியம் மற்றும் எழுதப்பட்ட இதிகாசங்கள் சம்பந்தமாக தற்போதுள்ள முக்கிய காரணியாக நாட்டினுள் தற்போதுள்ள ஆவண காப்பகங்கள் ஆகும். அத்துடன் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அந்த தகவல்கள் முக்கியமானதாக அமைவதோடு பாரம்பரிய ஆவண காப்பக முறைமைகளை விடவும் டிஜிடல் ஆவண முகாமைத்துவம் மிகவும் வெற்றியளிக்கின்றது. பெறுமதிமிக்க ஆவண பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு பாரம்பரிய ஆவண காப்பக முறைமைகளை விட தேவைகளை பூர்த்தி செயதுகொள்வதற்கு இனிவரும் காலங்களில் டிஜிடல் ஆவண காப்பகம் சிறப்பானதாக அமையும் என்றார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பூடான், இந்தியா, ஈரான், மாலைத்தீவு, நேபால் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆரச்சி அவர்கள் தேசிய ஆவண காப்பக பணிப்பாளர் திருமதி சரோஜா வெத்தசிங்க அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நாட்டின் பௌத்த பாரம்பரியம் அழிக்கப்படும்போது அதனை பாதுகாப்பதற்கு அவ்விடயம் தொடர்பாக பொறுப்பிலுள்ள அமைச்சர் என்ற வகையில் பௌத்த தத்துவம் மற்றும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை தவறாக அர்த்தப்படுத்தியும், ஆதாரமற்ற வகையில் விமர்சித்தும் குறுகிய நோக்கங்களுக்காக சில குழுக்கள் செயல்படுவது கவலையளிக்கின்றது. கைதவறிப்போயுள்ள அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியில் பௌத்த மக்களை ஏமாற்றும் செயல்கள் இடம்பெற்று வருவது தெளிவாகின்றது. அவர்களின் ஊழல் மோசடிகளை மக்கள் கவனத்திலிருந்து மூடிமறைத்து திசை திருப்பும் முயற்சியாகவே தெரிகின்றது.
ஆத்மாத்மாக இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை காப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளும்போது அதனை திரிபுபடுத்தும் செயல்களின் பின்புறத்தில் உள்ளவர்கள், இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை அழிப்பதற்கு திட்டமிடுகின்றார்களா என எமக்கு சந்தேகம் எழுகின்றது. இதனை மகா சங்க தேரர்கள் மற்றும் அரசாங்கதிற்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையென்றும், அஸ்கிரிய பீடத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் என அவர்கள் சித்தரிக்கின்றார்கள்.
தம்புள்ளை குகை விகாரையை பார்வையிடவரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டு விநியோகத்திற்கு 1996 ம் ஆண்டு முதல் 2015 வரை இடம்பெற்றுள்ள மோசடி குறித்து பரிசீலனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது, 2017 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ம் திகதி தம்புள்ளை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கொடகம மங்கல தேரர் தலைமையில் மகா சங்கத்தினர், தொல்பொருள் மற்றும் மத்திய கலாச்சார நிதிய அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைப்பெற்ற விசேட கூட்டத்தில் ஆகும். எனவே மகா சங்கத்தினர் மற்றும் அரசாங்கத்திற்கிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விகாரையின் உண்டியலில் மக்கள் பூஜித்து செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டு மீண்டும் விகாரக்கு கையளிப்பது இன்று நேற்று இடம்பெறும் விடயமல்ல. அது புத்தசாசன அமைச்சின் வசமுள்ள நடவடிக்கையாகும். இந்த சட்ட நடவடிக்கையை அறிந்திருந்தும் நாம் உண்டியலிலுள்ள ஆதாயத்தை அரசாங்கத்திற்கு கையளிக்கவுள்ளோம் என்றும், அதனை நானே செய்கின்றேன் என்றும், பௌத்த மக்களுக்கு தவறான தகவல்களை அவர்கள் பரப்புகின்றனர்.
உண்டியல் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டின் ஆதாயம் பெறுவது என இரண்டு விடயங்கள் உள்ளன. இந்நாட்டு தொல்பொருள் இடங்களை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவுக் கட்டணச் சீட்டு வழங்குவது மற்றும் அதன் பணத்தினை மத்திய கலாச்சார நிதியத்தினூடாக இந்நாட்டின் தொல்பொருள் மற்றும் விகாரைகளை பாதுகாப்பதற்கு பயன்படுத்துவதற்கான அதிகாரம், தொல்பொருள் சட்டம், மத்திய கலாச்சார நிதியச் சட்டம் மற்றும் விகாரை தேவாலயங்களின் சட்டத்தின்படி எமது அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க பொய் வதந்திகளை முன்னெடுப்பது கவலைக்குறியது.
மிகவும் பரிதாபமாக சேதமாக்கப்பட்டுள்ள தம்புள்ளை குகை விகாரை ஓவியங்கள் மற்றும் புத்த பகவானின் சிலைகளை பாதுகாப்பதே எமது முதல் தேவையாகும். பௌத்தர்களாக ஏராளமானோருக்கு தெரியாத எமது பாரம்பரிய பெறுமதிகள் வெளிநாட்டு நிபுணர்களின் ஊடாகவே எமக்கு தெரியவந்துள்ளது. தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக UNESCO நிறுவனத்தின் ஊடாக துரித நடவடிக்கை மேற்கொள்ளும்படியான அறிவித்தலும் அவ்வாறானதாகும். மேலும்
ICOMOS நிறுவனம் ஓவியப் பாதுகாப்பு சம்பந்தமான பேராசிரியர் திரு. வர்னர் ஸ்மித் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டு, விகாரை பாதுகாப்பு தொடர்பாக எடுக்கவேண்டிய சரியான தீர்மானங்களை தொல்பொருள் ஆலோசகர்கள் சபையினூடாக செய்யப்படும்.
அதற்கமைய பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படாவண்ணம் குகை விகாரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதோடு, பாதுகாப்பு தேவைக்கேற்ப காலவரைவுக்கு உட்பட்ட வகையில் பார்வையிடவும், குகை விகாரையை தற்காலிகமாக மூடுவதற்கும் தொல்பொருள் ஆலோசகர் சபை தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக விகாராதிபதி தேரருடன் கலந்துரையாடுவது அவசியமாகும் என நாம் தீர்மானித்துள்ளோம். இவ்விடயம் தொடர்பாக சிலர் விகாரையின் பூஜை நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், விகாரையை மூடுவதாகவும் பொய்யான கருத்துக்களை சமுதாயத்தில் வெளியிடுவது கவலையளிக்கின்றது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தொல்பொருள் பெறுமதியான இடங்களை தற்காலிகமாக மூடுவது உலகின் அனைத்து நாடுகளிலும் இடம்பெறுகின்றதொரு சாதாரண விடயமாகும். சீனப் பெருஞ்சுவர், இந்தியாவின் தாஜ்மகால் மற்றும் புத்தகயா மட்டுமல்ல, இலங்கையின் தலதா மாளிகை போன்ற இடங்களில் சில, சில பகுதிகளாக தேவைக்கேற்ப தற்காலிகமாக மூடிய சந்தர்ப்பங்கள் இதற்கு உதாரணங்களாகும். குகை விகாரையின் பாதுகாப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் மேற்கொள்ளத் தவறினால் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான ஆபத்து நேர்ந்துவிடும். அத்துடன் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற பெறுமதியான இடத்தினை பாதுகாத்துக்கொள்ள முடியாத இனமாக இலங்கைக்கு அபகீர்த்தி உண்டாகும். ஆகையினால் தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக சர்வதேச கவனத்தை தவறவிட இயலாது. அமைச்சராகவும், அமைச்சாகவும் நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களுக்கும் நடவடிக்கை மேற்கொள்வது, பௌத்த சிந்தனை மற்றும் நாட்டில் நிலவுகின்ற சட்டங்களுக்குட்பட்டு என்பதோடு, மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்குட்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். தம்புள்ளையிலிருந்து வருடக் கணக்காக அரசியல் செய்வோர் ரங்கிரி தம்புள்ளை உலக பாரம்பரியம் அழிந்தாலும் தமது அரசியல் லாபங்கருதி பொறுப்பிலிருந்து விலகியவர்கள் இன்று தம்புள்ளை விவகாரம் தொடர்பாக முதலைக் கண்ணீர் வடிப்பதோடு, நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் விமர்சிக்கின்றனர். இதில் தெளிவாக விளங்குவது அரசியல் அதிகாரம் பெறுவதே இவர்களின் நோக்கமேயன்றி நாடு மற்றும் மதம் பற்றிய அன்பினால் அல்ல என்பதாகும்.
தம்புள்ளை குகை விகாரை தொடர்பாக உண்மையான நிலைமைகளை அறிந்திருந்தும் அதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாது குறுகிய அரசியல் லாபத்திற்காக பிழையான தகவல்களை சமுதாயத்திற்கு தருவதால் இறுதியில் கிடைக்கப்படுவது உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து விலகும்படியான நிலையேயாகும். எவ்வாறாயினும் இந்நாட்டு பௌத்த பாரம்பரியத்தை காப்பதற்கு அன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளும் அஸ்கிரிய மற்றும் மல்வத்தை சங்கத்தினர் உடன் மகா நாயக்க தேரர்கள், இந்நாட்டு பௌத்த பாரம்பரியம் மற்றும் புராதன இடங்களை பாதுகாப்பதற்கு ஆசீர்வதிப்பார்கள் என நாம் நம்பிக்கைக்கொண்டுள்ளோம்.
மதுகம சி.டப்ளிவ்.டப்ளிவ். கண்ணங்கர வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிட திறப்பு விழா மற்றும் விஞ்ஞான தொழில்நுட்ப பீடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நேற்று 03 ம் திகதி நடைப்பெற்றது.
அனைத்து பாடசாலைகளும் விரிவான வசதிகளுடைய பாடசாலையாக அமைவதற்கான நோக்கத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக நிதியொதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் நாடு முழுவதும் 7000 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அப்பாடசாலைகளின் தேவைக்கேற்ப 18500 பிரிவுகளில் வசதிகளை மேம்படுத்தும் திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகின்றது.
இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகளுடன் பலரும் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக பாதிப்புக்குள்ளான இம்முறை நடைபெறவுள்ள க.பொ. த. உ/த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பரீட்சைக்கு சமூகமளிப்பதற்கு மேலதிக வாய்ப்பு வழங்குவது குறித்து பரிந்துரை செய்வதற்கான குழுவொன்றை நியமிக்கும்படி, பரீட்சை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் 19 ம் திகதி நடைபெற்ற இசிபதான வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் வைபவம் நிறைவுபெறும்போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு கௌரவ அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
மேற்படி சலுகையை வழங்கும்போது அம்மாணவர்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுவர் என தெரிவித்த கௌரவ அமைச்சர், அம்மாணவர்கள் இந்நாட்டு தேசிய பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான க.பொ.த. உ/த பரீட்சைக்கு தோற்றும் கூடுதல் வாய்ப்பு எண்ணிக்கை நான்காக நீடிப்பது குறித்தும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இறுதி தீர்வு மேற்கொள்ளப்படுமென கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.