பிந்திய செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் காரணமாகவே நாட்டின் கல்வி துறையில் புரட்சியான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்பட்டமை தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணையில் கல்வி அமைச்சர் நேற்று (01) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.
இதன்போது முன்னைய காலம் முதல் பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்படுகின்றது.இதுவரை கல்வி அமைச்சர்களாக இருந்தவர்களினதும் ஜனாதிபதிகளினதும் புகைப்படங்களுடன் வாழ்த்து செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம்
கல்வி துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்க பெற்றமை வரலாற்று வெற்றியாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
டெப் கணிணி வழங்கும் முதலாம் கட்டமாக தேசிய பாடசாலைகளின் உயர்தர மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் டெப் கணிணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் வெகு விரைவில் பாடசாலை கட்டமைப்புக்குள் டெப் கணிணியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய கல்வியல் கல்லூரிகளில் கல்வி போதனா ஆசிரியர்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

பூர்த்தியான பயிற்சிகளை பெற்ற ஆசிரியர்கள் உள்ள தென் ஆசியாவிலுள்ள ஒரே நாடு இலங்கையாகும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சியின் பிரதிநிதிகள் இருவரை இணைத்துக்கொண்டு குளியாப்பிட்டிய பிரதேச சபை அதிகாரத்தை கைப்பற்றிய பொதுஜன பெரமுன, அரசியல் இலாபத்திற்காக தற்போதைய அரசாங்கத்தில் ரிசாத் பதியுதீன் அமைச்சராக உள்ளமையை தேசத்துரோகமாக காட்ட முனைவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
குளியாப்பிட்டி நகர சபை மைதானத்தில் 2500 பேருக்கு சமுர்த்தி நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், 
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குளியாபிட்டிய நகர சபையில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எம்மால் முடிந்த போதும் குளியாப்பிட்டி பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும் போதுமான அளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் மொட்டு சின்னத்தை கொண்ட பொதுஜன பெரமுன கட்சியினர் ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சி பிரதிநிதிகள் இருவரை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றியது. அவ்வாறு நடக்காவிடின் குளியாபிட்டிய பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். 
ரிசாத் பதியுதீன் அவர்களின் கட்சியின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை கைப்பற்றிய பொதுஜன பெரமுன கட்சியினர்; தற்போது அரசாங்கத்தில் அமைச்சராக ரிசாத் பதியுதீன் உள்ளமையை தேசத்துரோகமாகியுள்ளது.
அரசியல் அதிகாரத்திற்காக குறுகிய நோக்குடன் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பதாயின் அது வெட்கப்படதக்க செயலாகும். ஆத்துடன் கடந்த காலங்களின் போது தகுதியானவர்களுக்கு கிடைக்காத சமுர்த்தி கொடுப்பனவை தகுதியானவர்களுக்கு வழங்குவதற்கும் எமக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. 
அத்துடன் அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதுடன் தேசிய ஐக்கியத்தை சீர்குலைப்பதற்காக செயற்படுவோருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

• தேசிய நிகழ்வு பிரதமர் தலைமையிலும் கல்வி அமைச்சரின் பங்கேற்றலுடனும் நாளை பேராதனை கல்வியற் கல்லூரியில்...
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வரலாற்றில் முதற்தடவையாக பாடசாலை அபிவிருத்திக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்திட்டமான அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடுபூராகவும் உள்ள பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட 250 கட்டடங்கள்  நாளை (04) தேசிய கல்வி கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களினதும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களினதும் பங்கேற்றலுடன் நாளை காலை 10 மணிக்கு பேராதனை தேசிய கல்வியற் கல்லூரியில் இதற்கான தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஒரே நாளில் பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வின் முதற் கட்டமாக மார்ச் மாதம் 200 கட்டடங்கள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக நாளைய தினம் 250 செயற்திட்டங்கள் கையளிக்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டத்திற்காக 4500 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளன. 
இதன்பிரகாரம் ஆரம்ப கற்றல் நிலையம் 68 உம், வகுப்பறை கட்டடங்கள் 52 உம், விஞ்ஞான ஆய்வு கூடங்கள் 22 உம், அதிபர்களுக்கான விடுதி 31 உம், ஆசிரியர்களுக்கான விடுதி 32 உம், தொழில்நுட்ப கட்டடங்கள் 34 உம், சிற்றூண்டி சாலைகள் 9 உம், பல் சிகிச்சை நிலையம் 3 உம் நாளை மாணவர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 18,000 செயற்திட்டங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் அவற்றில் 12,000 பாடசாலை அபிவிருத்தி செயற்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்திற்காக 65,000 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பாடப்புத்தகங்களில் கல்வி அமைச்சரின் வாழ்த்துச்செய்தி உள்ளடக்கப்படுவதால் அரசிற்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக முன்னாள் பதில் கல்வி ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் 1980 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்கியதில் இருந்து கல்வி அமைச்சரின் வாழ்த்து செய்தி அச்சிடப்படுகின்றது. மேலும் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை பெற்று முதலாமிடம் பெற்ற எனக்கு பாடபுத்தகங்களில் செய்தி வெளியிட்டு பிரபலமாக வேண்டிய அவசியமில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றுக்கொண்டதன் பின்னரே முன்வைக்ககப்படுகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

  • புதிய கொள்கைக்கு தலைமைத்துவம் வழங்கியதை நினைத்து அமைச்சர் மகிழ்ச்சி 
தேசிய கல்வி கொள்கையொன்றை தயாரிப்பதற்கு கல்வி அமைச்சர்கள் பலரும் முயற்சித்த போதும் முடியாமல் போனது. இந்நிலையில் எதிர்கால மனித வளத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாகும்  வகையில் உயர்ந்த தரத்தை கொண்ட புதிய தேசிய கல்வி சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவம் வழங்கியமை நினைத்து நான் மகிழ்ச்சி அடைக்கின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் புதிதாக தயாரிக்கப்பட்ட தேசிய கல்வி சட்ட வரைபு இன்று (20) இறுதி கலந்தாய்வுக்காக வெளியீடும் நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பத்தரமுல்லை வோர்டஸ் ஏஜ் ஹோட்டலில் கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்தாய்வு கூட்டத்திற்கு தேசிய கல்வி நிறுவகம், இலங்கை பரீட்சைகள் திணைக்களம், தேசிய கல்வி ஆணைக்குழு, கல்வி வெளியீட்டு திணைக்களம், கல்வி அமைச்சு, பல்கலைகழக மற்றும் உயர்கல்வி நிறுவக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பிரித்தானிய ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரைக்கும் அமுலில் உள்ள 1939ஃ31 இலக்க கல்வி சட்டமூலத்திற்கு பதிலாக புதிய கல்வி கொள்கையை தயாரிப்பதற்கு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின்; கல்வி அமைச்சர்கள் பலரும் அவதானம் செலுத்தியிருந்தனர்.
கல்வி துறையின் பல ஆண்டுகாலமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கு உரிய தீர்வினை முன்வைக்கும் வகையில் கல்வி துறையின் தரத்திற்காக புதிய தேசிய கல்வி சட்டமூலம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும்
ஆட்சி மாறினாலும் அமைச்சர்கள் மாறினாலும் கொள்கை ரீதியாக மாற்றமடையாத கல்வி கொள்கையொன்றை இதன் ஊடாக நாட்டுக்கு வழங்க முடியும். புதிய தேசிய கல்வி கொள்கை ஒன்றை தயாரித்தமையின் ஊடாக கல்வி துறையில் ஆர்வம் கொண்டோரின் நீண்ட கால எதிர்பார்ப்பினை மலர செய்துள்ளது என்றார்.


  • பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை கொண்டோர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதும் நாம் முயற்சியை கைவிடவில்லை     -  கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்


பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்பும் நோக்கில் முதலாம் கட்டமாக 3386 பேர் விளையாட்டு பயிற்சி பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்டமாக 502 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் இன்று (02) மஹரகம தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

வரலாற்றில் முதற்தடவையாக 3888 பேர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதன்போது உரையாற்றிய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ,

சர்வதேச மற்றும் தேசிய அளவில் திறமை கொண்டோரை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலை கட்டமைப்புக்குள் உட் சேர்த்துள்ளோம். செயற்திறன்மிக்க விளையாட்டு வீரர்களை பயிற்றுவிப்பாளர்களாக பாடசாலைகளுக்கு இணைத்துக்கொண்டமை எண்ணி நான் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை கொண்டோர் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்ட போதும் நாம் முயற்சியை கைவிடவில்லை என்றார்

நல்லிணக்கத்தை பாதிக்கும் விடயதானங்கள் பாடப்புத்தகங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை ஆராய கல்வி அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட 9-10 வரையான வகுப்பு இஸ்லாம் பாட நூல்களில் குற்றம் மற்றும் தண்டனை தொடர்பாக கூறப்பட்டுள்ளதாகவும் நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் பாடவிடயதானங்கள் உள்ளதாகவும் தெரிவுக்குழுவின் முன்னிலையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.. எனவே இது தொடர்பாக ஆராய கல்வி அமைச்சரின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.

-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் போட்டித்தன்மையுடன் கூடிய பரீட்சைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.  அதேபோன்று இனிமேல் இலங்கையிலும் கல்வி கட்டமைப்பினுள் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் போது சித்தி பெற்றல் அல்லது சித்தி பெறவில்லை என்பதனை மாத்திரம் குறிப்பீடு செய்வதுடன் அதற்கு மாறாக புள்ளிகள் அடிப்படையில் முதலாமிடம், இரண்டாமிடம் என்ற தரப்படுத்தல்கள் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டில் வசதிகளுடன் கூடிய பாடசாலை கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் 64 ஆயிரம் மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படும் கல்வி துறையின் பாரியளவிலான அபிவிருத்தி செயற்திட்டமான அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் குடாகத்நோருவ ஸ்ரீ சித்தார்த மஹா வித்தியாலயத்தில் 34 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கல்விக்கான கற்றல் வள நிலையம் மற்றும் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் போட்டித்தன்மையுடன் கூடிய பரீட்சையாக இருப்பதனால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகள் சுதந்திரமாக முன்னெடுப்பதற்கு முடியாமல் போயியுள்ளது. பரீட்சைகளின் ஊடாக மாணவர்களை தரப்படுத்துவது தேவையற்ற விடயமாகும்;. இந்த நிலைமைகளை மாற்றுவதற்கு என்னுடைய ஆலோசனைகளின் பேரில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சைகளில் மாணவர்களுக்கான ; தரப்படுத்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Search