அனைத்து தேசிய பாடசாலைகளிலும் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடத்தினை முழுமைப்படுத்தி பாடசாலைகளின் நிர்வாக மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் நடத்திச்செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். எனவே தேசிய பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக ஆசிரியர் தொடர்பான தகவல்களுக்கமைய ஆசிரியர் சமநிலைப் படுத்தலை துரிதப்படுத்தப்படும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அமைச்சர் நீண்ட காலமாக ஒரே தேசிய பாடசாலையில் சேவைப்புரிந்த ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தினை வழங்கவும், தேசிய பாடசாலையில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடத்திற்காக மாகாண அரச சேவையிலிருந்து விடுவித்து தகைமையுள்ள மாகாண ஆசிரியர்களை தேசிய பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கினார். அத்துடன் தரப்படுத்தலில் உள்ள ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கும் துரிதமாக தீர்வு காணப்படுமென கௌரவ கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த 19 ம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய பாடசாலை அதிபர்களின் கூட்டத்தில் மேற்படி அறிவுரையை கௌரவ கல்வி அமைச்சர் வழங்கியதோடு, அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் கட்டிட முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார். பாடத்திட்டம் மாற்றியமைத்தல் மற்றும் புதுப்பித்தலுக்கமைய ஆசிரியர்களுக்கு பயிற்சி நடவடிக்கை அவசியமாக்கப்படுவதோடு, பாடசாலை உள்ளக கண்காணிப்பு செயல்முறையினை பலப்படுத்துவதோடு, விளையாட்டுப் பயிற்சிகளிலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் தேவையென கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆளுமையை அபிவிருத்தி செய்வது மிகவும் முக்கியமானதெனவும், மேலும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வை பேணுவது பாடசாலை நல்ல முன்னேற்றத்தினை அடையும் என எடுத்துக்காட்டினார்.
இந்நிகழ்வில் கல்விச் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆராச்சி அவர்கள் மற்றும் மேலதிக செயலாளர்களும் அமைச்சின் உத்தியோகத்தர்களும் இணைந்துகொண்டனர்