பிந்திய செய்திகள்

-கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் 
சாதாரண தர, உயர்த தர பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் மாத்திரமின்றி பாடசாலை விளையாட்டு துறையை கட்டியெழுப்புவதற்காக சர்வதேச, தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றிப்பெற்ற சிறந்த விளையாட்டு வீரர்களை கல்வி கட்டமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் 3880 பேரை இணைத்துக் கொள்ளும் போது பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுத்ததாகவும்; மாகாண சபைகள் இந்த நியமனத்திற்கு தடையாக இருந்ததுடன் பலரும் சமூக வலைத்தளங்களை எனக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைத்த போதும் கல்வி அமைச்சின் கீழ் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை இணைத்துக் கொண்டமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சேவை ஆரம்ப பயிற்சி முடித்து விட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் 548 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு குருநாகல் மலியதேவ கல்லூரியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போது இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் தமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மத்தியில் சிறந்த புள்ளிகளை பெறுவோரை விரைவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி விசேட பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மீகலேவ ஆரம்ப பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கற்றல் வள நிலையத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் மாணவர்களிடம் கையளித்தார்.

 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
கல்வி துறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து தனது அரசியல் தோற்றத்தை தகர்ப்பதற்கான முயற்சிகளை ஒரு சிலர் முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிப்பிரிவில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவைக்கு உள்வாங்கும் திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி அலுவலகர்கள் 592 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (30) பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு  தெரிவித்தார். 
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
பாடசாலை சீருடை துணி வழங்கலில் காணப்பட்ட ஊழல் மற்றும் மோசடிகளை முற்றாக நீக்கி மாணவர்களின் சீருடையை வைத்து எவரும் மோசடிகளில் ஈடுப்படாமல்; இருப்பதற்காகவே பாடசாலை சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. சீரான ஒழுங்கு முறைமைக்கு அமைவாகவே குறித்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறைமையின் ஊடாக பல கோடிக்கணக்கான பணத்தை அராசாங்கத்திற்கு சேமிக்க முடிந்தது. 
அதேபோன்று சுரக்சா காப்புறுதி திட்டம் தொடர்பாக பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும் கல்வி அமைச்சினால் சுரக்சா காப்புறுதி திட்டம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக சுரக்சா திட்டத்தை தனியார் துறைக்கு வழங்கும் தீர்மானத்தை ஜனாதிபதியி நியமித்த மேன்முறையீட்டு விசாரணை குழுவே எடுத்தது. 
மேலும் பாடபுத்தகங்களில் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமை தொடர்பாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும் பாடபுத்தக வாழ்த்துச் செய்தி முறைமை முன்பு இருந்த கல்வி அமைச்சர்களின் காலத்திலும் நிலவியதுடன் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியும் கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களில் உட்சேர்க்கப்பட்டிருந்தது. எனினும் அமைச்சரின் வாழ்த்து செய்தி உட்சேர்க்கப்பட்டமைக்காக மேலதிக நிதி செலவிடப்படமாட்டாது. 
அதேபோன்று நவீன தொழில்நுட்ப முறைமையை மாணவர்களுக்கு வழங்கும் நோக்குடன் டெப் கணிணி வழங்கும் திட்டத்திற்கும் பல்வேறு இடையூறுகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனவே கல்வி துறையில் முன்னெடுக்கப்படும் மக்கள் நல திட்டங்களுக்கு இடையூறுகள் ஏற்படாமல் இருந்திருந்தால் தற்போதைக்கும் பார்க்க எம்மால் வேகமாக செயற்பட முடிந்திருக்கும். எனவே பின்லாந்து போன்ற நாடுகளில் காணப்படும் அபிவிருத்தி அடைந்த கல்வி தரத்தை இலங்கையிலும் உள்வாங்க வேண்டும் என்றார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
ஏதாவது ஒரு இனம் அடிப்படைவாதமாக செயற்பட்டால் அந்த இனமே பாதிப்புக்கு உள்ளாகும். அப்படி நடந்தால் அதன் விளைவை அனைவரும் பொதுவாக முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். மேலும் அடிப்படைவாத அரசியல் குழுக்கள் இனவாதம், மதவாதத்தை தூண்டி தம்மிடம் இருந்து இல்லாமல் போன அரசியல் அதிகாரத்தை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகின்றனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் 23.78 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடி தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். ஒரே நாடாக நாம் முன்னேற வேண்டுமாயின் இன,மத பேதமாக பிரிந்து செயற்படுவதனை விடுத்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். வரலாற்றில் இருந்து இலங்கையர்கள் ஒற்றுமையாக வாழ்ந்தவர்களாகும் என்றார்.

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் போயகனே மஹா வித்தியாலயத்தின் ஆய்வு கூடத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் திறந்து வைத்தார்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் சிங்கள மற்றும் தமிழ் மொழி பிரிவுகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்க்கப்பட்ட அபிவிருத்தி அலுவலர்கள் 592 பேரை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம அரங்கில் இன்று (30) நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்

அடுத்த தேர்தல்களின் போது கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக பொது சின்னத்தின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வோம்
                                                       
 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
அரச,தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் சுரக்சா காப்புறுதியை இலவசமாக வழங்கியுள்ளோம். இதன் கீழ் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்காக மாத்திரம் ஒரு நாளைக்கு மூவாயிரம் உட்பட 2 இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதி கிடைக்கும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்துடன் சுரக்சா காப்புறுதிக்காக அரச பொறுப்பில் உள்ள 75 வீதமான தொகையை மாணவர்களுக்கு வழங்காவிடின் குறித்த தொகையை மீளவும் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை காப்புறுதி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உட்சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பொத்துஹெர துடுகெமுனு மத்திய கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனுடன் அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் குருநாகல் கல்வி வலயத்திலுள்ள 20 பாடசாலைகளில் 387 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்களும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது முதலாம் வகுப்பின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான அடிப்படை சம்பளம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. எனினும் அதனை நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகரித்து கொடுத்தோம். அதேபோன்று அதிபர்களுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் எம்மால் முடிந்தது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாறான வளர்ச்சி போக்கு வரலாற்றில் கூட நடைபெறவில்லை.
அபிவிருத்தியை மாத்திரம் நாம் இலக்காக கொண்டு செயற்படுகின்றோம். அபிவிருத்தியன்றி வெறும் காட்சிப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை. ஊடகங்களையோ அல்லது பொது மக்களையோ அடக்கி ஆளும் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் முன்னெடுப்பதில்லை. அடுத்த தேர்தல்களின் போது கட்சியை வெற்றிப்பெற செய்வதற்காக பொது சின்னத்தின் கீழ் கட்சியை வழிநடத்தி செல்வோம் என்றார்.

 

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டிய நிலைமை இவ்வளவு காலம் இருந்தது.

சான்றிதழ்களை பெறுவதற்கு பல பிரதேசங்களில் இருந்தும் நாள்தோறும் பெரும்பாலானோர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தருகின்றனர். இதன்காரணமாக சான்றிதழ் வழங்கும் செயல் முறைக்கான காலம் அதிகமாக இருப்பதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக தீர்வினை வழங்குவதற்கு கல்வி அமை;சசர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனைகளின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி பொதுத்தராதர சாதாணர தர மற்றும் உயர் தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை நவீனமயப்படுத்துவதற்கான 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சரின் ஆலோசனை பேரில் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இனிமேல் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டியதில்லை. இதன்படி நவீனமயப்படுத்தப்பட்ட பரீட்சைகள் திணைக்களத்திற்கான இணையதளத்தின் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இணையதளத்தின் ஊடாக எவ்வாறு சான்றிதழை பெற்றுக்கொள்ளல் மற்றும் பணம் செலுத்தல் போன்ற செயல் முறை கீழ்வருமாறு,

  • www.doenets.lkஇணையதளத்திற்குள் நுழையவும்.
  • • அங்குள்ள request for certificate இற்கு நுழையவும்.
  • • முன் சென்ற பின் request for certificate என்று காட்டப்படும் பச்சை நிறத்திலுள்ளவையை அழுத்தவும்.
  • • அதன்பின்னர் காட்சிப்படும் தகவல் பெறல் அட்டவணையில் தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உட்சேர்க்கவும். அதனுடன் இணையதளத்தில் மோசடி காரியங்களில் ஈடுப்படமாட்டேன் என உறுதிப்படுத்தவும்.
  • • அதனுடன் உங்களது தொலைபேசிக்கு கிடைக்கும் OTP CODE யை உட்சேர்க்கவும்.
  • • அதன்பின்னர் உங்களுக்கு சான்றிதழ் பெற தேவையான பரீட்சை மற்றும் பரீட்சைக்கு தோன்றிய வருடம், பரீட்சை இலக்கம் ஆகியவற்றை சரியாக உட்சேர்க்கவும் (2001 ஆம் ஆண்டு முதல் நடந்த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கான சான்றிதழ்களை மாத்திரம் தற்போதைக்கு இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.)
  • • உட்சேர்க்கப்பட்ட உங்களது பெயர் பிழையற்றதா என மீள்சரிபார்க்கவும்.
  • • ஏதாவது பிழைகள் இருப்பின் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
  • • அதன்பின்னர் பரீட்சை சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு செயல்முறைகள் இருக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து எத்தனை சான்றிதழ் வேண்டும் என்பதனை குறிப்பிட்டு உறுதிப்படுத்தவும்.
  • • சான்றிதழை எவ்வாறு கிடைக்க வேண்டும் என்ற செயல் முறையை கூறவும்.
  • • பதவி தபாலின் ஊடாக கிடைக்கபெற வேண்டுமாயின் திரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உங்களது தகவல்களை பூரணமாக தரவும்.
  • • நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தொடர்பான தகவல் திரையில் காட்சிப்படுத்தப்படும்.
  • • Proceed to payment click செய்யவும்.
  • • பணத்தை செலுத்தும் முறைமையை தேர்ந்தெடுக்கவும்.
  • • Card மூலம் பணத்தை செலுத்தும் முறைமை திரையில் காட்சிப்படுத்தப்படும்.
  • • அதனை பூரணப்படுத்தியதன் பின்னர் உங்களது தகவல்கள் மற்றும் கட்டணம் தொடர்பான குறிப்பு காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர் proceed click செய்யவும்.
  • • அதன்பின்னர் உங்களுக்கு reference number ஒன்று கிடைக்கும்.
  • • தபால் மூலம் பணத்தை செலுத்துவதாயின் உங்களுக்கு reference number எடுத்துக்கொண்டு தபால் காரியாலயத்திற்கு சென்று பணத்தை செலுத்த முடியும். பணத்தை செலுத்தியதன் பின்னர் மீளவும் இணையளத்திற்கு பிரவேசித்து I Already made the payments க்குள் நுழையவும்.
  • • உங்களுக்கு கிடைத்த reference number யை உட்சேர்க்கவும்.அதன்பின்னர் உங்களின் கொடுப்பனவின் தகவலை காண்பிக்கும்.
  • • பெறுபேறுகளில் ஏதாவது பிரச்சினைகள் public results verification இல் நுழைந்து அதனை கூறவும்.
  • • இது தொடர்பாக இன்னும் பல தேடல்களுக்கு இணையத்தளத்தின் check certificate status க்குள் நுழையவும்.

2020 ஆம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்பட்டது.

குறித்த சுற்றுநிருபம் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகல் மஹிந்த வித்தியாலயத்திற்கு நிர்வாக பிரிவுடன் கூடிய மூன்று மாடி கட்டடத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மாணவர்களிடம் கைளித்தார்.

 -கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
  • பரீட்சை சான்றிதழ்களை இணையதளங்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான முறைமை அறிமுகம்
               
 
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தூதரகஙகளின்; ஊடாக வழிகளை செய்யும் செயல்முறையொன்றை முன்னெடுக்குமாறு பரீட்சை திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தல் தொடர்பாக 2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் பரீந்துரையின் பிரகாரம் பரீட்சை திணைக்களத்தின் நவீனமயப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இணையளத்தளம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளத்தின் (ழடெiநெ) ஊடாக வழங்குவதனை அங்குரார்பணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
பரீட்சைகள் திணைக்களம் நம்பிக்கைக்கு பாத்திரமான நிறுவனமாக இயங்க வேண்டும். அதற்காக பல்வேறு செயல்முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் பல்வேறு பிரத்தியேக தலையீடுகளை முடிந்தளவில் குறைத்துக்கொள்ள வேண்டும்.
நான் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று நான்கு வருடங்களில் பல்வேறு புரட்சிரமான மாற்றங்களை கல்வி துறையில் முன்னெடுத்துள்ளேன். அச்சமின்றி தீர்மானங்கள் பல எடுத்த போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து இடையூறுகளையும் விமர்சனங்களையும் சந்தித்தேன். டெப் கணிணி வழங்கும் திட்டம் மாத்திரமே முன்னெடுக்க முடியாமல் போனது. எனினும் எப்படியாவது மாணவர்களுக்கு டெப் கணிணி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன்.
கல்வியை அடிப்படையாக கொண்டே எதிர்காலம் அமைய போகின்றது. இந்நிலையில் புதிய பிரவேசங்களை இனங்கண்டு எல்லைகளை கடந்து செயற்பட்டால் எம்மால் பல மாற்றங்களை செய்ய முடியும். இதன்படி பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தளத்தின் ஊடாக வழங்கும் முறைமை புதிய வேலைத்திட்டமாகும் என்றார்.

குளியாபிட்டி தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய காரியாலயத்தை இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் அவர்கள் திறந்துவைத்தார்.

Search