யுனிஸ்கோ அமைப்பின் இலங்கைக்கான தலைவரும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் பங்கேற்பு
யுனிஸ்கோ அமைப்பின் 206 ஆவது நிறைவேற்று சபை கூட்டம் நேற்று முன் தினம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்றது.இந்த நிறைவேற்று சபை கூட்டத்திற்கு யுனிஸ்கோ அமைப்பின் இலங்கைக்கான தலைவரும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
யுனிஸ்கோ அமைப்பின் 206 ஆவது நிறைவேற்று சபை கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றிய அந்த அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரி அசுலே அவர்கள், யுனிஸ்கோ அமைப்பு தற்காலத்தில் முகங்கொடுத்து வருகின்ற சவால்களுக்கு பதில் அளித்தார். யுனிஸ்கோ அமைப்பின் நடவடிக்கைகளை பலப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக கல்வி, பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வி, ஊடக சுதந்திரம், வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடுவது போன்ற விவகாரங்கள் தொடர்பில் அவர் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.
கல்வி துறை தொடர்பாக உரையாற்றிய பணிப்பாளர் நாயகம், 21 ஆம் நூற்றாண்டின் போது சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு கல்வி பயில்வதன் அவசியத்தை உணர்த்தினார். மேலும் கல்வியின் புதிய தரத்தை அபிவிருத்தி செய்வதற்காக அடுத்த யுனிஸ்கோ பொதுக் கூட்டத்தொடரின் போது கல்வி தகைமைகளை ஏற்றுக்கொள்வதற்கான பிரகடணமொன்றை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுனிஸ்கோ நிறைவேற்று சபை கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைகான யுனிஸ்கோ அமைப்பின் தலைவர் மற்றும் அவ்வமைப்பின் நிறைவேற்று சபையின் உறுப்பினருமான கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் கல்வி துறையில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து நிறைவேற்று சபையில் தெளிவூட்டினார்.
நவீன உலகின் தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இலங்கை கல்வி கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் கல்வி அமைச்சின் ஊடாக நடடிவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கூறிய கல்வி அமைச்சர், 13 வருட தொடர் கல்வி திட்டம் தொடர்பாகவும் யுனிஸ்கோ நிறைவேற்று சபை கூட்டத்தில் அறிவுறுத்தினார். க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெறாத மற்றும் தொழில் திறமைகளை பெற்றுக்கொள்ள முடியாத சிறுவர்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள சமூக நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் குறித்த திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் சிறுவர்களின் கல்வி தொடர்பான முரண்பாடுகளை நீக்கும் வகையிலும் கல்விக்கான சம வாய்ப்புகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கிலும் முன்னெடுத்து வரும் அருகாமை பாடசாலை – சிறந்த பாடசாலை வேலைத்திட்டம் தொடர்பாகவும் கல்வி அமைச்சர் நிறைவேற்று சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.
இதற்கு அப்பால் 5 வயது தொடக்கம் 19 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் சுரக்ஷா காப்புறுதி திட்டம் தொடர்பாகவும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார். இலங்கை அரசாங்கம் சிறுவர்களின் சுகாதார பாதுகாப்புக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் யுனிஸ்கோ நிறைவேற்று சபையின் பாராட்டுக்கு உள்ளாகியது.
பாடசாலை விளையாட்டு வர்ண உற்சவம் நேற்று (04) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது