கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் கருத்திற்கமைய, 2017 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் கலை மற்றும் படைப்பு துறைகளில் சிறப்பான திறமையை வெளிக்காட்டும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கல்வி அமைச்சின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுகத புலமைப்பரிசில் வேலைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் நேற்று (ஜுலை 31 ம் திகதி) முதல் கோரப்பட்டுள்ளன.
எதிர்கால சவால்களை வெற்றியீட்டுவதற்காக ஆக்கப்பூர்வமான சந்ததியினரை உருவாக்கிட அவர்களின் திறனை அபவிருத்தி செய்வதுடன், இப்புலமைப்பரிசில் புதிய தயாரிப்புகள், அழகியல் மற்றும் விளையாட்டு போன்ற 3 துறைகளுக்கு வழங்கப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பிள்ளைகளுக்கு 20 மாதங்களுக்கு 50000/= ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் பகிர்ந்தளிக்கப்படும்.
மேலும் விபரங்களை விண்ணப்பபடிவத்தில் பெற்றுக்கொள்ள இயலும்.
தமிழ்
https://goo.gl/b1JCwe
மத்திய கலாச்சார நிதியத்தின் முன்னேற்ற ஆய்வு அமர்வுக் கூட்டம் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நேற்று (07) ம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
அங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் விலை மதிப்பில்லா பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் பாரிய பொறுப்பு தொல்பொருள் திணைக்களத்திற்கும், மத்திய கலாச்சார நிதியத்திற்கும் உள்ளதாகவும் அத்தகைய கடமையைச் செய்யும்பொழுது அந்நிறுவனங்கள் சரியானதொரு ஒருங்கிணைப்புடன் செயல்படவேண்டியது அவசியமாகும் என்றார்.
இந்நாட்டில் மேலும் முக்கிய சில இடங்களை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்காக தாம் அதன் செயற்குழு உறுப்பினர் என்ற வகையில் தொடர்ந்து போராடுவேன் என தெரிவித்தார். அத்துடன் அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முகங்கொடுக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வையும் பெற்றுக்கொடுத்தார்.
இச்சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் திரு. சுனில் ஹெட்டிஆராச்சி அவர்கள், மேலதிக செயலாளர் திரு. அசோக சிறிவர்தன அவர்கள், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாந்த மண்டாவல அவர்கள், மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பிரசாந்த குணவர்தன அவர்கள் மற்றும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அரச சொத்துக்களை மக்களுக்காக அன்றி தமது என பாவித்த அரசியல்வாதிகள் மக்களால் புறக்கணிக்கப்படுவது கட்டாயமாகும். பாடசாலை பிள்ளைகளுக்கு சீருடை வழங்குவதன் ஊடாக நடைப்பெற்ற மக்கள் பணம் வீணாக்கப்படுவதை தடுப்பதற்காக சீருடைப் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்ளும்போது சில தொழிற்சங்கங்களும் சீருடைப் பற்றுச்சீட்டு வழங்குவது தொடர்பில் எம்மை விமர்சித்தார்கள். எனினும் அதனூடாக அரசாங்கத்திற்கு அதிகப்படியான பணம் மீதப்பட்டதுடன் சீருடையை வழங்குவதற்காக மாணவர்களுக்கு வழங்கும் பற்றுச்சீட்டின் பெறுமதியையும் அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதென தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நேற்று (30) ம் திகதி நடைப்பெற்ற
தனியார் கல்வி நிறுவனங்களின் ஏழாவது சம்மேளனம் கௌரவ அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றபோது மேற்கண்ட கருத்தினை அமைச்சர் கூறினார்.
தமது பிள்ளைகளுக்கு எவ்வகையிலாவது நல்ல கல்வியை வழங்குவதற்கு அனைத்து பெற்றோர்களும் விரும்புகின்ற போதிலும் அதற்காக தனியார் கல்வி நிறுவனங்கள் காட்டும் அக்கறை மதிக்கும்படியாக உள்ளதென கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் அங்கு தெரிவித்தார். பாடசாலை நடைபெறும் காலங்களில் தனியார் வகுப்பறை நடத்துவதற்கு அனுமதிக்கப்போவதில்லை எனவும் நல்லெண்ணம் மிக்க பிரஜைகளை உருவாக்குவதே கல்வியின் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.
தற்போது அதிகமாகப் பேசப்படுகின்ற ஹம்பந்தோட்டை துறைமுகத்தினை குத்தகைக்கு விடப்பட்ட விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டிற்கு இலாபத்தை ஈட்டி தருவதற்கான கூட்டு வியாபாரத்தினை ஏற்படுத்தி தொழில்வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மேலும் மக்கள் மீது அதிக வரியை சுமக்கும்படியான ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நடாத்திச்செல்வதற்கு பதிலாக அதனை குத்தகைக்கு விட்டதும், கடந்த அரசாங்கத்தினால் விற்கப்பட்ட கொழும்பு போட் சிட்டி திட்டத்தை குத்தகை ஒப்பந்தத்தின் ஊடாக மீண்டும் நடாத்திச்செல்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதும் மக்கள் நலனுக்காகவே என்று அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
காலமுழுவதும் ஆசிரியர் சேவையை மேற்கொண்டவர்களை கௌரவிக்கும்படியாக கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டதுடன் இவ்விழாவில் வடமாகாண ஆளுநர் திரு. ரெஜினோல்ட் குரே அவர்களுடன் பலரும் கலந்துகொண்டனர்.
குளியாப்பிட்டிய தண்டகமுவ சுதர்மாராம புராதன விகாரையின் தர்மசாலை புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப்பின் சம்புத்த சாஸனத்திற்கு பூஜை செய்தல் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் செப்டெம்பர் மாதம் 2 ம் திகதி நடைபெறும். இதில் கௌரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்துகொள்வதுடன் விளக்கேற்றும் வைபவமும் நடைபெறும். மேற்படி விகாரையின் புதுப்பித்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தினூடாக எட்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பெறுமதிமிக்க இப்பழமையான விகாரையை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பது தேசிய கடமையாவதுடன் மத்திய கலாச்சார நிதியத்தினூடாக சுமார் 12000 விகாரைகள் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.