பிந்திய செய்திகள்

2019 ஆம் ஆண்டில் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று (03) கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. கல்வி அமைச்சு சார்பாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க அவர்களும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸ் அவர்களும்; ஒப்பந்ததில் கைச்சாத்திட்டனர்.
2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 30 ஆம் திகதி வரை சுரக்ஷா காப்புறுதியை செலுத்துவதற்கு அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்ததின் ஊடாக இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் சுரக்ஷா காப்புறுதி வழங்கும் போது கிடைத்த அனுபவம் மற்றும் இனங்காணப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அதிகளவிலான நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முறை சுரக்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சுரக்ஷா காப்புறுதியானது சுகாதார காப்புறுதி, அவசர விபத்து காப்புறுதி, வாழ்க்கை காப்புறுதி என மூன்று பிரிவுகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. சுகாதார காப்புறுதியின் ஊடாக தனியார் அல்லது அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு 200,000 ரூபாவும், வெளிவாரியாக சிகிச்சை பெறுவதற்கு 200,000 ரூபாவும், குணப்படுத்த முடியாத நோய்க்காக 200,000 ரூபா முதல் தேவைக்கேற்ப வகையில் பணம் பெற முடியும். (அரச வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு நாள் ஒன்றுக்கு 3000ரூபா கிடைக்கும்). அவசர விபத்து காப்புறுதியின் கீழ் முழுமையான செயலிழப்புகளுக்கு 200,000 ரூபாவும், அரைவாசி செயலிழப்புகளுக்கு 150,000 முதல் 200,000 ரூபா வரை பெற முடியும். அத்துடன் வாழ்க்கை காப்புறுதி திட்டத்தின் கீழ் இயற்கை அல்லது அவசர விபத்துகள் ஆகிய இரண்டும் குறித்த திட்டத்தில் உள்ளடங்குவதுடன், பெற்றோர் உயிரிழப்பின் போது ஒருவருக்கு 200,000 ரூபாவும் மாணவர் உயிரிழக்கும் பட்சத்தில் 150,000 பணம் கிடைக்கும். குடும்பத்தில் பாடசாலைக்கு செல்லும் அனைத்து பிள்ளைகளுக்கும் பெற்றோர் உயிரிழக்கும் போது குறித்த சலுகை கிடைக்கும்.
அரச பாடசாலை மாணவர்களுக்கும் தனியார் பாடசாலை மாணவர்களுக்கும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கும் பிரிவெனாவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அவரது சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் சுரக்ஷா காப்புறுதி வழங்கப்படவுள்ளது. இதன்படி; 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான காப்புறுதி தொகை 45 இலட்சம் மாணவர்களுக்கும் கிடைக்கும். 2017 ஒக்டோபர் 01 முதல் சுரக்ஷா காப்புறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 011364155 அல்லது 0112369369 இலக்கத்தின் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

 
• ஜப்பான் சகுரா விஞ்ஞான வேலைத்திட்டத்துக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் பத்து பேர்...
 
பங்குபற்றும் மாணவர்களுக்கு விமான பயண சீட்டுகளை  வழங்கி வைத்தார் கல்வி அமைச்சர்
 
ரஷ்யா ,ஜேர்மன்,சீனா,நெதர்லாந்து உள்ளிட்ட 35 நாட்டு பாடசாலை மாணவர்கள் பங்கு கொள்ளும் 26 ஆவது சர்வதேச இளைஞர் விஞ்ஞானி போட்டி இம்முறை மலேசியாவின் கோலாம்பூர் நகரில் நடைபெறவுள்ளது.
 
2019 ஏப்ரல் 19-25 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ள குறித்த போட்டிக்கு இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு மாணவர்கள் பங்குக்கொள்ளவுள்ளனர். இந்த போட்டிக்காக பாடசாலை,வலய,மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகளின் போது விசேட திறமைகளை முன்வைத்த மாணவர்களே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 
அத்துடன் ஜப்பான் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஊடாக நடத்தப்படும் சகுரா விஞ்ஞான வேலைத்திட்டத்துக்கு விஞ்ஞான துறையில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு குறித்த வாய்ப்பை வழங்குவதற்கு ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் 2018 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பாடத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களில் நேர்முக பரீட்சையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 10 பேர் ஜப்பானுக்கு பயணிக்கவுள்ளனர். இந்த வேலைத்திட்டம் ஏப்ரல் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ளது.
 
மேற்குறித்த போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கான விமான பயணசீட்டுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (02) கல்வி அமைச்சில் நடைபெற்றது. இதன்போது குறித்த மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பயணசீட்டுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வுக்கு கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 

 
தெய்வேந்திர முனையில் இருந்து பருத்திதுறை வரையிலான இலக்கிய பாலம் என்ற தொனிப்பொருளின் கீழ் தமிழ் - சிங்கள இலக்கிய நூல் மொழிபெயர்ப்புச் செயற்திட்டத்தின் ஆரம்பம் நிகழ்வு இன்று (28) கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
 
தேசிய நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் முகமாக இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையில் இலக்கிய பரிமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்கள் தமிழ் மொழியிலும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் ஆலோசனையின் கீழ் குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்த செயற்திட்டத்தின் முதற்கட்டமாக இலக்கிய நயம் கொண்ட 7 சிங்கள நூல்கள் தமிழ் மொழியிலும் 7 தமிழ் நூல்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்று கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கபட்டன.

கொழும்பு பல்கலைகழகத்தின் லக்ஸ்மன் திஸாநாயக்க கேட்போர் கூடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (04) திறந்து வைத்தார். இந்த நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டார்.மேலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கருணாரத்ன பரணவிதான ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

2019 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான முதலாம் தவனை ஏப்ரல் ஐந்தாம் திகதி நிறைவுபெறவுள்ளதுடன் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.
 
முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாவது தவனை ஏப்ரல் 11 ஆம் திகதி நிறைவு பெறுவதுடன் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஏப்ரல் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் பாடசாலைகளுக்கான தவனை காலம் நிறைவு பெறுவதற்கு முன்னர் டெங்கு நோய் ஒழிப்புக்கான சிரமதான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடுகள் செய்துள்ளன. இந்த சிரமதான பணிகள் இரண்டாம் தவனைக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் வரையான காலப்பகுதிக்குள்; குறித்த சிரமதான வேலைத்திட்டம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும். 
 

2018 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான  பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகளை நிர்ணயிக்கப்பட்ட திகதியில் வெளியிடல் மற்றும் காலதாமதம் இன்றி உரிய காலப்பகுதிக்குள் பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பில் கல்வி அமைச்சர் கடந்த வருடங்களின் போது விசேட அவதானம் செலுத்தியிருந்தார்.

இதன்பிரகாரம் பாடசாலை கல்வி கட்டமைப்புடன் சார்ந்த பரீட்சை பெறுபேறுகளை காலதாமதம் இன்றி நிர்ணயிக்கப்பட்ட திகதியொன்றில் வெளியிடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் பிரதிபலனாக ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியும், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதியும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கு பாடசாலை மட்டத்தில் 422,850 பேரும், வெளிவாரியாக 233,791 பேரும் விண்ணப்பம் செய்திருந்தனர். இதன்படி  மொத்தமாக 656,641 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.  கடந்த டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய  ரீதியிலுள்ள 4661 பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சை இடம்பெற்றது. கடந்த வருடங்களை போன்று சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதன்படி     என்ற இணையளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட படங்களையும் காணலாம்.

கல்வி அமைச்சின் புதிய செயலாளராக நிஹால் ரணசிங்க இன்று (01) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார். மேலும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டையொட்டி இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்பும் நோக்குடன் புகோகா ஜப்பான் பணி குழு பரிமாற்றல் நிகழ்வு நேற்று (25) கல்வி அமைச்சில் நடைபெற்றது.
 
இலங்கை வருகை தந்துள்ள ஜப்பான் பணிகுழு நேற்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களை சந்தித்தது
 

மிலாகிரிய புனித பால்ஸ் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (03) நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையிலும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் பங்குபற்றலுடனும் நடைபெற்றது.
 
இதன்போது முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை பிரதான கேட்போர் கூடம் மற்றும் நிர்வாக கட்டடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரின் பங்குபற்றலுடன் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் நல் வாழ்த்துக்கள் - கல்வி அமைச்சர் 
பல்வேறு திறமைகள் இருந்த போதிலும் சாதாரண பரீட்சையில் சித்தி பெறாத மாணவர்கள் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளும் வகையில் கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி 13 வருட தொடர் கல்வி திட்டத்தின் கீழ் தொழில் பிரவேசத்துக்கான 26 பாடதுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதன்படி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்றாலும் பெறாவிட்டாலும் எதிர்காலத்தை வெற்றிக்கொள்ளும் வகையில் தொழில் வாய்ப்புகளை கொண்ட உலகை வெற்றிக்கொள்வதற்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இனிமேலும் சாதாரண தர பரீட்சை போட்டி தன்மையுடன் கூடியதாக இருக்காது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
மேலும் இம்முறை க.பொ.த (சாதாரண தர) பரீட்சையில் தோற்றிய  75 சதவீதமானோர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்திற்கு இலட்ச கணக்கான மக்களை கொழும்பு அழைத்து வந்து வெகு விமர்சையாக கொண்டாடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். 
 
அடுத்து நடத்தப்படவுள்ள தேசிய தேர்தலை வெற்றிக்கொள்ளும் வகையில் இம்முறை மே தின பேரணியும் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
 
தற்போது ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் களுத்துறை மாவட்டத்தில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டது. மே தினத்திற்கு பின்னர் அநுராதபுரம் மாவட்டத்தில் சிறிகொத்த கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம்.
அத்துடன் மே தினத்திற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் ஆரம்பிக்கவுள்ள மெகா கூட்டணியை பிரகடணப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.  மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விரும்பும் கட்சிகளுடன் இணைந்து அடுத்த தேசிய தேர்தலை வெற்றிக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார்.
 

Search