அண்மையில் ஏற்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல , கொடம்பபிட்டிய மற்றும் பன்டுவஸ்நுவர பகுதிகளில் தற்போதைய நிலைமைகளை கண்டறிந்த பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ..
பாடசாலைகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியதன் காரணமாகவே மாணவர்களின் வருகையை எதிர்பார்கின்றோம். அரசியலுக்காக மாணவர்களை பழியாக்காமல் அரசியல் தலைவர் சரியானதை செய்ய வேண்டும் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்
பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுக்குமாறு ஆலோசனை
பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளின் பிரகாரம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தற்போது பாடசாலைகளில் மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளது. எனவே பாடசாலை நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுத்து செல்லுமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலை பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
எனினும் ஒரு சில குழுவினர் பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கல்வி அமைச்சுக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. இந்த குழுவினர் பாடசாலைகளுக்கு வரக்கூடாது என அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகம் செய்து வருகின்றனர்.
ஆகவே மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்படும் குழுக்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான குழுக்கள் மற்றும் தனி நபர்களுக்கு தொடர்பாக குற்ற விசாரணை பிரிவிற்கு தகவல்களை வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவுறுத்துகின்றது.
பாதுகாப்பு பிரிவின் பூரண உடன்பாட்டை பெற்றதன் பின்னர் எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாடசாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக 18 விடயங்களை உள்ளடக்கிய விசேட சுற்றுநிருபமும் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. முப்படைகளினதும் உளவு பிரவினதும் ஆலோசனைகளை செவிமடுத்த பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும். அதற்கும் மாற்றமாக எம்மால் எந்தவொரு தீர்மானமும் எடுக்க முடியாது. பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது பாதுகாப்புடன் கூடிய இடமாக பரிசோதனைகளின் பின்னர் உறுதிப்படுத்துவதாகவும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என முப்படை பிரதானிகளிடம் வாய்மூலமாகவும் எழுத்து மூலமாகவும் கோரியுள்ளேன். மேலும் கத்தோலிக்க பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் பாதுகாப்பு பிரதானிகளுடனும் கர்தினால் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளேன் என்றார்
அண்மையில் ஏற்பட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல , கொடம்பபிட்டிய மற்றும் பன்டுவஸ்நுவர பகுதிகளில் தற்போதைய நிலைமைகளை கண்டறிந்த பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ...
ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தொடர் குண்டு வெடித்தமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொடர் குண்டு வெடிப்பை பயன்படுத்தி ஒருசிலர் அரசியல் செய்கின்றனர். இது சிறந்த ஒன்றல்ல. ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் இவ்வாறான சம்பவம் ஏற்பட்டமை எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மனிதனின் உயிருடன் அரசியல் செய்வது உகந்தது அல்ல. மேலும் எதிரணி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் இனவாதத்தை கக்கி வருகின்றார்.எனவே பதவி ஆசைகளுக்காக ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்து குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. என்றார்